உத்திரப் பிரதேச மாநிலத்தின் மாவ் மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஏ.கே.சர்மா. குஜராத் மாநிலத்தில் 1988ஆம் பிரிவில் தேர்ச்சிபெற்று மாவட்ட ஆட்சியராகப் பணியாற்றி வந்த நிலையில் அவர், அண்மையில் விருப்ப ஓய்வு பெற்றார். பிரதமர் மோடி குஜராத்தில் முதலமைச்சராக இருந்தபோது அவருடன் மிக நெருக்கத்துடன் இருந்து பணியாற்றியுள்ளார்.
இந்நிலையில், அவர் தன்னை பாஜகவில் இணைக்கப்போவதாக கூறிவந்த நிலையில், லக்னோவிலுள்ள பாஜக அலுவலகத்தில் நேற்று (ஜன.14) சென்று தன்னை பாஜகவில் இணைத்துக்கொண்டார்.
இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர் கூறியதாவது, 'மாவ் மாவட்டத்தின் பின்தங்கிய கிராமத்தைச் சேர்ந்தவராக இருந்த நான், பல போராட்டங்களைச் சந்தித்த பிறகே மாவட்ட ஆட்சியராகப் பணியாற்றினேன். தற்போது நான் சிறிய மற்றும் நடுத்தர தொழில் வளர்ச்சி கழகத்தின் செயலர் பதவியிலிருந்த கடந்தாண்டு ஏப்ரல் மாதத்தில் விருப்ப ஓய்வு பெற்றேன்.
அரசியல் பின்புலமும் இல்லாத என்னைப் போன்றுள்ள நபர்களும் பாஜகவில் இணைகின்றனர் என்றால், அதற்குக் காரணம் மோடி தான். அவருக்கும், கட்சிக்கும், கட்சியின் தலைமைக்கும் நான் எப்போதும் நன்றியுள்ளவனாக இருப்பேன்' எனத் தெரிவித்தார்.
இதுகுறித்து உ.பி. மாநில பாஜக தலைவர் ஸ்வதந்திர தேவ் சிங் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியதாவது, 'பாஜகவில் இணைந்த முன்னாள் மாவட்ட ஆட்சியர் ஏ.கே.சர்மாவை பாஜக குடும்பத்திற்கு வரவேற்கிறேன். 'சபா சாத், சப்கா விகாஸ்' சித்தாந்தத்துடன் தொடர்புடைய ஷர்மாவின் திறன்கள், அர்ப்பணிப்பால் கட்சி நிச்சயமாக புதிய உத்வேகத்தைப் பெறும்' எனக் குறிப்பிட்டிருந்தார்.
இது குறித்து நமது ஈடிவி பாரத் செய்தியாளரிடம் கூறியதாவது, "நான் ஒரு அரசியல் குடும்பத்தைச் சேர்ந்தவன் அல்ல. எனக்கு எந்த அரசியல் கட்சியிடமும் தொடர்பும் இல்லை. நான் கட்சியின் நலனுக்காகவே செயல்படுவேன்" என்றார்.
இதையும் படிங்க: 'திமுகவை வீழ்த்த சசிகலாவுடன் அதிமுக இணையலாம்' - குருமூர்த்தி சூசகம்