ETV Bharat / bharat

குஜராத் சட்டமன்ற தேர்தல்: முதற்கட்ட வாக்குப்பதிவில் 57% வாக்குகள் பதிவு! - குஜராத் தேர்தல்

குஜராத் சட்டமன்ற தேர்தலில் இன்று முதற்கட்டமாக 89 தொகுதிகளில் நடைபெற்ற வாக்குப்பதிவில் மாலை 5 மணி நிலவரப்படி 57 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

குஜராத் சட்டமன்ற தேர்தல்
குஜராத் சட்டமன்ற தேர்தல்
author img

By

Published : Dec 1, 2022, 6:48 PM IST

காந்திநகர்: குஜராத் சட்டமன்றத்திற்கு உட்டபட்ட 182 தொகுதிகளில் இரு கட்டங்களாக தேர்தல் நடத்தப்படுகின்றன. முதல் கட்டமாக 19 மாவட்டங்களில் உள்ள 89 தொகுதிகளுக்கு இன்று(டிசம்பர் 1) வாக்குப்பதிவு நடைபெற்றது.

பாலம் அறுந்து விழுந்து 130 பேர் பலியான சம்பவம் அரங்கேறிய மோர்பி, கட்ச், ஜாம்நகர், சவுராஷ்ட்ரா உள்ளிட்ட தொகுதிகளில் தீவிர கண்காணிப்புடன் வாக்குப்பதிவு தொடங்கின. காலை 8 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கிய நிலையில், பெண்கள், முதியோர், இளைஞர்கள் என பொது மக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து ஓட்டு போட்டு தங்கள் ஜனநாயக கடமையை ஆற்றினர்.

ஒட்டுமொத்தமாக 14 ஆயிரத்து 382 வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு நடைபெற்றன. 39 கட்சிகளை சேர்ந்த 339 வேட்பாளர்கள் உள்பட 788 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். மாலை 5 மணியுடன் முதற்கட்ட வாக்குப்பதிவு நிறைவுபெற்ற நிலையில், ஓட்டுமொத்தமாக 56 புள்ளி 88 சதவீதம் வாக்குகள் பதிவாகி உள்ளதாக இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

அதிகபட்சமாக தபி(Tapi) தொகுதியில் 72 புள்ளி 32 சதவீதமும், குறைந்தபட்சமாக பாவ்நகரில் 51 புள்ளி 34 சதவீதமும் வாக்குகள் பதிவானதாக இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க: பெண் யூடியூபருக்கு 'லைவ்'வில் பாலியல் தொல்லை - இரு இளைஞர்கள் கைது...

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.