ETV Bharat / bharat

திருமணத்தை மறந்து சாலைக்காக போராடிய புதுமாப்பிள்ளை

author img

By

Published : Dec 6, 2022, 10:44 PM IST

மாற்று சாலை அமைத்து தரக்கோரி நடந்த போராட்டத்தில், மணக் கோலத்துடன் புதுமாப்பிள்ளை கலந்து செய்தி இணையத்தில் வைரலாகி வருகிறது.

புதுமாப்பிள்ளை போராட்டம்
புதுமாப்பிள்ளை போராட்டம்

ஹல்த்வாணி (உத்தரகாண்ட்): உத்தரகாண்ட் மாநிலத்தில் சாலையை சீரமைத்து தரக்கோரி திருமண ஊர்வலத்தை நிறுத்தி புதுமாப்பிள்ளை தர்ணாவில் ஈடுபட்ட சம்பவம் அரங்கேறியுள்ளது.

காத்கோடம் ஹைதா கான் சாலை, சுற்றுவட்டாரத்தைச் சேர்ந்த 150 கிராம மக்களுக்கு பிரதான வழிப்பாதையாக இருப்பதாக கூறப்படுகிறது.

கடந்த நவம்பர் மாதம் ஏற்பட்ட நிலச்சரிவால், பாறைகள், மண் சரிந்து சாலை மூடப்பட்டது. 150 கிராம மக்களுக்கு பிரதான வழியாக இருந்த சாலை உள்ளூர் நிர்வாகம் சீரமைத்து தரவில்லை எனக்கூறி காங்கிரஸ் உள்ளிட்ட கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்நிலையில் போராட்டம் நடந்து கொண்டு இருந்த பகுதியில் திருமண ஊர்வலம் சென்றுள்ளது. சாலை முடக்கத்தால் ஏறத்தாழ 5 கிலோ மீட்டர் சுற்றி வந்த கோபத்தில் இருந்த புதுமாப்பிள்ளை, சட்டென திருமண ஊர்வலத்தை விட்டு விலகி போராட்டத்தில் ஈடுபட்டார்.

புதுமாப்பிள்ளையைத் தொடர்ந்து பெண் வீட்டார் மற்றும் உறவினர்களும் தர்ணா போராட்டத்தில் கலந்து கொண்டனர். போராட்டத்தில் புது மாப்பிளை கலந்து கொண்ட புகைப்படங்கள் இணையத்தில் வேகமாகப் பரவி வருகின்றன.

கூடிய விரைவில் அரசு தலையீட்டு மாற்றுப்பாதை அமைத்து தராவிட்டால் போராட்டத்தை தீவிரப்படுத்த உள்ளதாக ஆர்ப்பாட்டக்காரர்கள் தெரிவித்தனர்.

இதையும் படிங்க: 'ஸ்டாலின் நாமதேசியா..': அமைச்சர் சமஸ்கிருதத்தில் செய்த அர்ச்சனை

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.