ETV Bharat / bharat

Trend:திரையில் ஒரு தட்டு தட்டினால் போதும்..! : அத்தனையும் வரும் இல்லம்தேடி

author img

By

Published : May 24, 2022, 10:59 PM IST

நகரவாசிகளுக்கு பொருளாதார ரீதியாகவும், வசதிகள் ரீதியாகவும் முழுமையாக நிறைவு செய்து அவர்களிடம் பெரிதும் வரவேற்பைப் பெற்றுள்ளது ’ஆன்லைன் ஷாப்பிங்’.

திரையில் ஒரு தட்டு தட்டினால் போதும்..! : அத்தனையும் வரும் இல்லம்தேடி

முதலில் புதிய கண்டுபிடிப்பாக அறிமுகமாக்கப்பட்ட ’ஆன்லைன் ஷாப்பிங்’ முறை, கடந்த கோவிட் காலகட்டங்களில் இயல்பான ஒரு முறையாக மாறிவிட்டது. பால், தின்பண்டங்கள், காய்கறிகள், பழங்கள், மளிகை சாமான்கள், மருந்துகள், அசைவ உணவுகள் என அனைத்தும் ஒரே கிளிக்கில் வீடு தேடி வந்துவிடும் நிலை உண்டாகியுள்ளது.

கடந்த இரண்டு வருடங்களில் ஆன்லைன் பணபரிவர்த்தனை முறைகள் அதிகமாக பெருகியுள்ளன. ஹைதராபாத், சென்னை போன்ற அதிகமான அசைவ பிரியர்கள் வாழும் நகரத்தில், ஞாயிறுகளில் கறிக்கடையில் குவியும் நீண்ட கியூவை ‘லிசியஸ்’, ’டெண்டர் கட்ஸ்’ போன்ற ஆன்லைன் ஷாப்பிங் செயலிகள் குறைத்துள்ளன.

பல பெரிய சூப்பர் மார்க்கெட்களும், ஏனைய சிறு மளிகை கடைகளும் மளிகை சாமான்களை வீட்டிலேயே டெலிவெரி செய்கின்றன. ‘பிக் பாஸ்கெட்’, ‘டுன்சோ’, ‘ரிலையன்ஸ் மார்ட்’, ‘அமேசான்’, ‘ ஃபிளிப் கார்ட்’ போன்ற செயலிகள் மளிகைப் பொருட்களை வீட்டிலேயே டெலிவரி செய்யப்பயன்படுகிறது. ஜவுளிகள் வாங்க ’ஸ்னாப் டீல்’, ‘மிண்ட்ரா’ போன்ற செயலிகள் இருக்கின்றன.

மேலும், தற்போது எல்லாம் குடும்பங்கள் ஓடிடி தளங்கள் மூலம் குடும்பத்தோடு படம் பார்க்கும் பழக்கம் பரவி வருகிறது. அதிகரிக்கும் பெட்ரோல், டிக்கெட் விலைகளைக் குறைக்கும் வகையில் வீட்டிலேயே படங்களைக் கண்டுகளிக்கத் தொடங்கியுள்ளனர்.

மாலைப் பொழுதுகளை மால்களில் செலவிடுவதை விட பார்க்கில் களித்துவிடுவதையே விரும்பிகின்றனர். கோவிட் காலங்களில் இளைஞர்கள் ஸ்டாக் மார்க்கெட்டில் முதலீடு செய்வது போன்ற செயல்களிலெல்லாம் ஈடுபட்டனர். ‘க்ரோ’ போன்ற செயலிகளின் உதவியால் வீட்டிலிருந்தபடியே டிரேடிங் செய்து வருகின்றனர்.

ஆன்லைனில் பெரிதும் ஆர்டர் செய்யப்படும் பொருளாக உணவு இருந்து வருகிறது. 24 மணிநேரமும் டெலிவரி செய்யும் நபர்கள் பம்பரம் போல் சுற்றித் திரிகின்றனர். கடந்த ரம்ஜான் இஃப்தார் நேரங்களில், ஏப்.2 - ஏப்.22 வரை 4.50 லட்சம் ஆர்டர்களை ’ஸ்விக்கி’ நிறுவனம் டெலிவரி செய்துள்ளது.

இதையும் படிங்க: விஸ்மயா வழக்கு: கணவர் கிரண் குமாருக்கு 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.