ரயில்வே துறையை மேற்படுத்துவது தொடர்பாக ரயில்வே துறை அமைச்சர் பியூஷ் கோயல் இன்று (டிச.20) காணொலி வாயிலாக ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் ரயில்வே வாரிய தலைவர் வி.கே.யாதவ் உள்ளிட்ட முக்கிய அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
ரயில்களை நவீனமயமாக்குவது, அதன் வேகத்தை மேம்படுத்துவது மற்றும் ரயில் பாதை அமைப்பது தொடர்பான பல்வேறு திட்டங்கள் குறித்து அப்போது ஆலோசிக்கப்பட்டது.
இந்த ஆலோசனைக் கூட்டத்திற்குப் பிறகு அமைச்சர் வெளியிட்ட ட்விட்டர் பதிவில், ”உள்ளூர் தயாரிப்புகளை ஊக்குவிக்கும் வகையில் ’மேக் இன் இந்தியா’ திட்டத்தின்கீழ் ரயில்வேதுறையை நவீனப்படுத்துவது தொடர்பாக கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது” என்று குறிப்பிட்டிருந்தார்.
இதையும் படிங்க : ஐஆர்சிடிசி நிறுவனத்தின் பங்குகளை விற்கும் மத்திய அரசு