ETV Bharat / bharat

அரசுப் பள்ளிகள் மாணவர்களை புறக்கணிக்கக் கூடாது- எதிர்க்கட்சி தலைவர் வலியுறுத்தல்!

அரசுப் பள்ளிகளுக்கு சேர வரும் அனைத்து மாணவர்களையும் சேர்த்துக்கொள்ள வேண்டும் என புதுச்சேரி எதிர்கட்சித் தலைவர் சிவா வலியுறுத்தியுள்ளார்.

புதுச்சேரி எதிர்கட்சித் தலைவர் சிவா
புதுச்சேரி எதிர்கட்சித் தலைவர் சிவா
author img

By

Published : Jul 19, 2021, 9:07 PM IST

புதுச்சேரி: அரசு பள்ளிகளில் சேர வரும் அனைத்து மாணவர்களையும் சேர்த்துக் கொள்ளவேண்டும் என புதுச்சேரி மாநிலத்தின் எதிர்கட்சித் தலைவர் வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது, 'தமிழ்நாடு முதலமைச்சர் கரோனா ஊரடங்கால் பாதிக்கப்பட்ட மக்களை காக்கும் வகையில் நிவாரண நிதி வழங்கினார். அதுபோல புதுச்சேரியிலும் நிவாரணம் வழங்க வேண்டும் என்று திமுக கோரிக்கை வைத்தது. அதனையேற்று, புதுச்சேரி அரசும் ரூ.3 ஆயிரம் நிவாரணமாக அறிவித்தது.

ஆனால், 2 தவணையாக தரப்படும் என அறிவிக்கப்பட்டு சுமார் 3 வாரங்கள் கழித்தே முதல் தவணை ரூ.1500 மட்டும் வழங்கப்பட்டுள்ளது. இரண்டாவது தவணைத் தொகை இதுவரை வழங்கப்படவில்லை. அதை உடனடியாக தர வேண்டும். இது உணவின்றி தவிக்கும் எளிய குடும்பத்தினரை காப்பாற்றும் என்பதால் உடனடியாக இந்த பணத்தை வழங்க வேண்டும்.

அதுபோல் கடந்த 10 ஆண்டுகாலமாக உயர்த்தப்படாமல் உள்ள முதியோர், விதவைகள் மற்றும் கணவனால் கைவிடப்பட்டவர்களுக்கான உதவித் தொகையில் ரூ.500 உயர்த்தி தருவதாக அரசு அறிவித்தது. அத்தொகை கடந்த மாதமே கிடைக்கும் என்று அனைவரும் எதிர்பார்த்திருந்த நிலையில் இந்த மாதம் வரையில் வழங்கப்பட வில்லை. இந்தப் பணம் வீடுகளில் முடங்கி இருக்கின்ற முதியோர்களுக்கு கவுரவத்தையும், மரியாதையையும் வழங்கச் செய்யும். எனவே இந்த பணத்தை உடனடியாக வழங்குவதற்கான நடவடிக்கைகளை அரசு எடுக்க வேண்டும்.

மாணவர்களை கைவிடும் அரசு பள்ளிகள்

கரோனா தொற்றால் ஒரு நல்ல விஷயம் நடைபெறுகின்றது என்றால் அது அரசுப் பள்ளிகளை நோக்கி மாணவர்கள் வருவது தான். ஆனால் அரசுப்பள்ளிகளில் ஏற்கனவே உள்ள இடங்களை விட கூடுதலாக 50 விழுக்காடு மாணவர்களை சேர்த்துவிட்டோம். அதனால் மாணவர்களைச் சேர்க்க முடியாது எனப் பள்ளி முதல்வர்கள், தலைமை ஆசிரியர்கள் திருப்பி அனுப்பி வரும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. இது சரியான விஷயம் இல்லை.

அரசுப்பள்ளிகளும் புறக்கணித்தால் எளிய குடும்பத்து மாணவர்கள் எங்கு சென்று கல்வி கற்க முடியும்? தற்போது வரை புதுச்சேரி பள்ளிகளில் இடை நிற்றல் என்பது பூஜ்யமாக உள்ளது. இவ்வாறு மாணவர்களை திருப்பி அனுப்பும் போது, சில விழுக்காடு இடை நிற்றல் ஏற்படலாம். இது புதுச்சேரி அரசுக்கும், கல்வித்துறைக்கும் பெரும் இழுக்காகவும், கரும்புள்ளியாகவும் அமைந்துவிடும்.

எனவே அரசுப்பள்ளிகளுக்கு வரும் அனைத்து மாணவர்களையும் சேர்த்துக்கொள்ள அரசும், கல்வித்துறையும் உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். கூடுதல் வகுப்பறைகள் தேவைப்பட்டால் கட்ட வேண்டும். ஆசிரியர்கள் தேவைப்பட்டால் உடனடியாக நியமிக்க வேண்டும். இது போன்ற ஆபத்தான காலங்களில் அரசுப் பள்ளிகள் தான் மாணவர்களை, பெற்றோர்களையும் காப்பாற்றும். இவைகளை உணர்ந்து அரசு இவ்விஷயத்தில் உரிய நடவடிக்கைகளை தீவிரமாக எடுக்க வேண்டும்' எனத் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: மீனவர்களுக்கு மானியத்தில் கட்டுமரம்: நிதி வழங்கிய முதலமைச்சர்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.