ETV Bharat / bharat

'யு-டர்ன் சர்க்கார்' - மத்திய அரசை சாடும் காங்கிரஸ் - கரோனா வைரஸ் தொற்று

டெல்லி: நாட்டின் அனைத்து மக்களுக்கும் கரோனா தடுப்பூசி போடத் தேவையில்லை என்று கூறியதற்காக மத்திய அரசை 'யு-டர்ன் சர்க்கார்' என்று காங்கிரஸ் விமர்சித்துள்ளது.

"யு-டர்ன் சர்க்கார்" மத்திய அரசை சாடும் காங்கிரஸ்!

author img

By

Published : Dec 3, 2020, 10:19 AM IST

உலகையே அச்சுறுத்திய கரோனா வைரஸ் தொற்றின் தாக்கம், தற்போது இந்தியாவில் குறையத் தொடங்கியுள்ளது. இதனைக் கட்டுப்படுத்தும் நோக்கில் மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுவருகின்றன.

கரோனாவுக்கு எதிரான தடுப்பூசி இறுதிகட்ட பரிசோதனையில் உள்ளது. இந்தத் தடுப்பூசி விரைவில் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், நாட்டு மக்கள் அனைவருக்கும் கரோனா தடுப்பூசி கிடைக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்கும் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.

பிரதமரின் அறிவிப்பு வெளியான சில நாள்களிலேயே நாட்டு மக்கள் அனைவருக்கும் கரோனா தடுப்பூசி போடத் தேவையில்லை என்று மத்திய சுகாதார அமைச்சகம் சார்பில் தெரிவிக்கப்பட்டது. கரோனா தடுப்பூசி விவகாரத்தில் மத்தியில் ஆளும் பாஜக அரசு பொதுமக்களைக் குழப்பிவைத்துள்ளதாக காங்கிரஸ் விமர்சித்துள்ளது.

இது தொடர்பாக தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் காங்கிரஸ், "ஒவ்வொரு இந்தியருக்கும் கரோனா தடுப்பூசி கிடைக்கும் என்று பிரதமர் கூறினார். ஆனால், நாட்டு மக்கள் அனைவருக்கும் தடுப்பூசி போடப்படாது என்று சுகாதார அமைச்சகம் கூறியுள்ளது. பிரதமரின் அறிக்கை 'போலியான வாக்குறுதி'" எனப் பதிவிட்டுள்ளது. மேலும், மத்திய அரசை 'யு-டர்ன் சர்க்கார்' என்றும் விமர்சித்துள்ளது.

இதுதொடர்பான மற்றொரு ட்வீட்டில், "இந்திய மக்களுக்குத் தெளிவு கிடைக்குமா? அவர்களுக்கு தடுப்பூசி கிடைக்குமா அல்லது இந்தக் கொடிய தொற்றிலிருந்து தங்களைத் தாங்களே தற்காத்துக்கொள்ளும் நிலைதான் தொடருமா?" என்று கேள்வி எழுப்பியுள்ளது.

கரோனா தடுப்பூசி தொர்பாக செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய மத்திய சுகாதாரத் துறைச் செயலர் ராஜேஷ் பூஷண், "கரோனாவிற்கு எதிராக நாட்டின் ஒட்டுமொத்த மக்களுக்கும் தடுப்பூசி போட வேண்டிய அவசியமில்லை.

மக்கள் அனைவருக்கும் தடுப்பூசி போடுவது பற்றி மத்திய அரசு ஒருபோதும் அறிவிக்கவில்லை என்பதை நான் தெளிவுபடுத்த விரும்புகிறேன். இதுபோன்ற அறிவியல் ரீதியான சிக்கல்களை உண்மைத் தகவல்களின் அடிப்படையில் மட்டுமே விவாதித்து அதைப் பகுப்பாய்வு செய்ய வேண்டும்" என்று கூறினார்.

இதையும் படிங்க: பாம்பனிலிருந்து 90 கிமீ வடகிழக்கே புரெவி புயல்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.