உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியை நியமிப்பதில் பல்வேறு நடைமுறைகள் பின்பற்றப்பட்டுவருகின்றன. அதன்படி, உச்ச நீதிமன்றத்தில் மூத்த நீதிபதியாக இருப்பவர்தான், தலைமை நீதிபதி பதவியில் அமரவைக்கப்படுவார். மேலும், ஓய்வுபெறும் நீதிபதியின் பரிந்துரையைச் சட்ட அமைச்சர் கேட்பார் எனக் கூறப்படுகிறது.
அதைத் தொடர்ந்து, ஓய்வுபெற்ற நீதிபதியின் பரிந்துரை சட்ட அமைச்சரிடம் கொடுக்கப்படும். அவர் அதனை, தலைமை நீதிபதியை நியமனம்செய்வதில் குடியரசுத் தலைவருக்கு ஆலோசனை வழங்கும் பிரதமரிடம் கொடுப்பார்.
ஒருவேளை தலைமை நீதிபதி நியமனத்தில் குழப்பம் ஏற்படும்போது, மற்ற நீதிபதிகளுடன் கலந்தாலோசிக்கப்படும் எனக் கூறப்படுகிறது.
கிடைத்த தகவலின்படி, நீதிபதி என்.வி. ரமணாதான், உச்ச நீதிமன்றத்தில் மூத்த நீதிபதியாக உள்ளார். அவருக்கு 2022 ஆகஸ்ட் 26 வரை பதவிக்காலம் உள்ளது.
இதையும் படிங்க: பொதுத்தேர்வு எழுத மாணவர்கள் நேரடியாகத்தான் வர வேண்டும் - மகாராஷ்டிர அமைச்சர் திட்டவட்டம்