மீரட்: உத்தரப் பிரதேச மாநிலம் மீரட் மாவட்டத்தில் உள்ள கன்கேர் கேரா என்ற பகுதியில் வெள்ளிக்கிழமை (ஜூன்3) நடந்த கிஷான் பஞ்சாயத் (விவசாயிகள் பஞ்சாயத்து) கூட்டத்தில் கலந்துகொண்டார். அப்போது பேசிய அவர், “அரசு என்னை கொல்ல திட்டம் தீட்டுகிறது.
அதற்கு சமீபத்தில் டெல்லி, கர்நாடகாவில் நடந்த இரு சம்பவங்கள் முக்கிய உதாரணங்கள் ஆகும். தலைமை ராணுவ அலுவலர் ஜெனரல் பிபின் ராவத் மரணத்தின்போது டெல்லியில் தாக்கப்பட்டேன். தொடர்ந்து, பெங்களூருவில் என் மீது கறுப்பு பெயிண்ட் திட்டமிட்டு வீசப்பட்டது” என்றார்.
தொடர்ந்து, “இது மிகவும் மோசமான காலகட்டம். அரசு மோசமான அரசியலில் ஈடுபடுகிறது” எனவும் குற்றஞ்சாட்டினார். மத்திய அரசு சர்ச்சைக்குரிய வகையில் 3 வேளாண் சட்டங்களை கொண்டுவந்தது. இந்த வேளாண் சட்டங்களுக்கு எதிராக நாடு முழுக்க விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து விவசாயிகளின் எதிர்ப்புக்கு பணிந்த நரேந்திர மோடி அரசு, அண்மையில் இந்த வேளாண் சட்டங்களை திரும்ப பெற்றது.
இந்த வேளாண் சட்டங்களுக்கு எதிராக பெரும் போராட்டங்களை முன்னெடுத்தவர் ராகேஷ் திகாயத் ஆவார். இவர் மீது அண்மையில் கர்நாடகாவில் கறுப்பு பெயிண்ட் ஊற்றி தாக்குதல் நடத்தப்பட்டது. இந்தத் தாக்குதலில் ஈடுபட்டதாக மூவர் கைதுசெய்யப்பட்டனர். அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், கன்னடத்தில் பேசாததால் கறுப்பு பெயிண்ட் ஊற்றினோம் என வாக்குமூலம் அளித்திருந்தனர் என்பது நினைவு கூரத்தக்கது.
இதையும் படிங்க: விவசாய சங்கத்தலைவரின் மீது வீசப்பட்ட கறுப்பு மை; 3 பேர் கைது - கர்நாடகாவில் பரபரப்பு