டெல்லி: உலகம் முழுவதும் ஃபேஸ்புக், ட்விட்டர் போன்ற சமூக வலைதளங்களை கோடிக்கணக்கானோர் பயன்படுத்தி வருகின்றனர். அதிகமான இளைஞர்களைக் கொண்டுள்ள இந்தியா, இதுபோன்ற சமூக வலைதளங்களுக்கு பெரும் சந்தையாக விளங்குகிறது. மாணவர்கள், நடுத்தர வயதினர் என சமூக வலைதளங்களில் பயனாளர்களின் எண்ணிக்கை தினமும் அதிகரித்துக்கொண்டுதான் இருக்கிறது.
தற்போது சமூக வலைதளங்களில் கணக்கு தொடங்குவதற்கு அலைபேசி எண் அல்லது மின்னஞ்சல் முகவரி மட்டுமே போதுமானது. மின்னஞ்சல் முகவரியை உருவாக்குவதற்கும் அலைபேசி எண் மட்டுமே தேவை என்பதால், ஒரே எண்ணில் பல மின்னஞ்சல் முகவரி உருவாக்கப்படுகிறது. இது பல போலி சமூக வலைதளப் பக்கங்களை உருவாக்குவதற்கும் வழி செய்கிறது.
எதுவும் வேண்டாம்
இதைத்தடுக்கும் வகையில், ஆதார் அட்டை போன்ற அரசின் அடையாள அட்டைகளை சமூக வலைதள கணக்குகளோடு இணைக்க வேண்டும் என்று அரசு முடிவெடுத்துள்ளதாக கூறப்பட்டது. இது தனிநபர் அடையாளங்களைப் பாதுகாக்கும் விதிக்கு எதிரானது என பொதுமக்களிடையே குற்றச்சாட்டு எழுந்தது.
இந்நிலையில், ஃபேஸ்புக், ட்விட்டர் கணக்குகளை அரசு அடையாள அட்டையுடன் இணைக்கும் திட்டம் ஏதுமில்லை என்று ஒன்றிய அரசு கூறியுள்ளதாகவும், அதனால் சமூக வலைதள கணக்குகளைத் தொடங்க அரசின் அடையாள அட்டையை இணைக்க வேண்டிய அவசியமில்லை எனவும் தகவல் வெளியாகியுள்ளது.
இதையும் படிங்க: தியேட்டரில் மட்டும்தான் 'கேஜிஎஃப் 2' - கொந்தளிக்கும் ரசிகர்கள்