ETV Bharat / bharat

ஹிஜாப் அணியாமல் வர ஒப்புக்கொண்ட 6 மாணவிகளின் சஸ்பெண்ட் ரத்து! - 6 மாணவிகளின் இடைநீக்கம் ரத்து

கர்நாடக மாநில அரசு கல்லூரி ஒன்றில் வகுப்பிற்கு கட்டுப்பாட்டை மீறி, ஹிஜாப் அணிந்ததால் இடைநீக்கம் செய்யப்பட்ட 24 மாணவிகளில் 6 பேர் ஆடை கட்டுப்பாடுகளை(அதாவது ஹிஜாப் அணியாமல் வருவதாக சம்மதித்ததையடுத்து) கடைபிடிப்பதாக ஒப்புக்கொண்ட நிலையில், 6 மாணவிகளின் இடைநீக்கத்தை கல்லூரி நிர்வாகம் ரத்து செய்தது.

ஹிஜாப் விவகாரம்
ஹிஜாப் விவகாரம்
author img

By

Published : Jun 9, 2022, 6:52 PM IST

கர்நாடகா: மங்களூரு மாவட்டம், உப்பிலாங்கொடி பகுதியில் உள்ள முதல் தர அரசு கல்லூரியில் ஜூன் 7ஆம் தேதி வகுப்பிற்கு ஹிஜாப் அணிந்து வந்ததால் 24 மாணவிகள் ஒரு வார காலத்திற்கு இடைநீக்கம் செய்யப்பட்டனர்.

மாணவிகள் வகுப்பிற்கு ஹிஜாப் அணிந்து வந்து, மாநில உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பிற்கு எதிராக செயல்பட்டதாலும், கல்லூரியின் கற்றல் சூழலுக்கு பாதிப்பை ஏற்படுத்தியதாகவும் கூறி கல்லூரி மேம்பாட்டுக்குழுவால், ஒரு வார காலத்திற்கு இடைநீக்கம் செய்யப்பட்டனர்.

இதையடுத்து இடைநீக்கம் செய்யப்பட்ட 24 மாணவிகளில் 6 பேர் கல்லூரி நிர்வாகத்தின் சீருடைக் கட்டுப்பாடுகளுக்கு உட்படுவதாக, அதாவது ஹிஜாப் அணியாமல் வருவதாக சம்மதித்ததையடுத்து, எழுத்துப்பூர்வ கடிதத்தை சமர்ப்பித்த நிலையில், அதை ஏற்றுக்கொண்ட கல்லூரி நிர்வாகம் 6 பேரின் இடைநீக்கத்தை ரத்து செய்துள்ளது.

கல்லூரியில் மொத்தம் 101 இஸ்லாம் மாணவிகள் பயின்று வரும் நிலையில், செவ்வாய்க்கிழமை (ஜூன் 7) தரவுப்படி 11 மாணவிகள் மட்டுமே ஹிஜாப் அணிவதற்கு ஆதரவான நடவடிக்கைகளில் ஈடுபடாமல், கல்லூரியின் சீருடைக் கட்டுப்பாடுகளை கடைப்பிடித்து வகுப்புகளுக்கு வருவதாக கூறப்படுகிறது.

இருப்பினும் கல்லூரி நிர்வாகம் கர்நாடக உயர் நீதிமன்றத்தின் உத்தரவை மீறி, ஆடைக் கட்டுப்பாடுகளை மீறும் மாணவர்களை, கல்லூரியில் இருந்து இடைநீக்கம் செய்து நடவடிக்கை எடுக்கும் முடிவில் உறுதியாக உள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.

இதையும் படிங்க: கர்நாடகாவில் பொதுத்தேர்வு எழுதாத 20,000 மாணவிகள்! - ஹிஜாப் தடை காரணமா?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.