வங்கதேசத்தில் கமிலா என்ற பகுதியில் உள்ள இந்து கோயிலில் தசரா பண்டிகையின் ஒரு பகுதியாக துர்கா பூஜை விழா கொண்டாடப்பட்டது. அப்போது, மர்ம நபர்கள் சிலர் கோயிலுக்குள் புகுந்து சூறையாடினர்.
இந்த செய்தி அண்டை பகுதிகளிலும் பரவியுள்ளது. அதைத்தொடர்ந்து சந்தாபூர், சட்டோகிராம், கோக்ஸ் பஜார் உள்ளிட்ட பகுதிகளிலும் கோயில்கள் தாக்கப்பட்டுள்ளன. இது ஒரு கட்டத்தில் அப்பகுதிகள் முழுவதும் கலவரமாக மாறியுள்ளது.
இரு தரப்புக்கு நடைபெற்ற வன்முறை மோதலில் மூன்று இந்துக்கள் கொல்லப்பட்டனர். நிலைமையை கட்டுக்குள் கொண்டுவர வங்கதேச அரசு, பிரச்னைக்குரிய 22 மாவட்டங்களில் துணை ராணுவப் படையை பணியமர்த்தியுள்ளது.
மேலும், இப்பகுதிகளில் வசிக்கும் இந்து சிறுபான்மை மக்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்கி, துர்கா பூஜை விழா முறையாக நடத்த காவல்துறை ஆவண செய்ய வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது.
இதையும் படிங்க: தமிழ்நாட்டில் பெருகிவரும் துப்பாக்கி கலாச்சாரம்...கள்ளத்துப்பாக்கி கிடைப்பது எப்படி?