ETV Bharat / bharat

கேரள தங்கம் கடத்தல் விவகாரம்: பிணை மனுவைத் திரும்பப் பெற்ற முன்னாள் முதன்மைச் செயலர்! - சுங்கத் துறை

கொச்சி: தங்கம் கடத்தல் வழக்குத் தொடர்பாக கைதுசெய்யப்பட்டுள்ள, கேரள முதலமைச்சர் அலுவலகத்தின் முன்னாள் முதன்மைச் செயலர் எம். சிவசங்கர் தனது பிணை மனுவைத் திரும்பப் பெற்றார்.

முன்னாள் முதன்மைச் செயலர் எம்.சிவசங்கர்
முன்னாள் முதன்மைச் செயலர் எம்.சிவசங்கர்
author img

By

Published : Dec 8, 2020, 6:57 AM IST

ஐக்கிய அரபு அமீரகத்தின் பெயரில் சட்டவிரோதமாக கேரளாவிற்கு தங்கம் கடத்திய விவகாரத்தில் அம்மாநில முதலமைச்சர் அலுவலகத்தின் முன்னாள் முதன்மைச் செயலர் சிவசங்கர் நவம்பர் 24ஆம் தேதி சுங்கத் துறையினரால் கைதுசெய்யப்பட்டார். தற்போது இந்த வழக்கை அமலாக்க இயக்குநரகம், தேசிய புலனாய்வு அமைப்பு, சுங்கத் துறை விசாரித்துவருகின்றன.

இந்த வழக்கில் தனக்குப் பிணை வழங்குமாறு சிவசங்கர் கேரள உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல்செய்திருந்தார். மேலும், பணம் மோசடி விவகாரம் தொடர்பான வழக்கில் பிணை வழங்குமாறு சிறப்புப் பொருளாதாரக் குற்றங்கள் நீதிமன்றத்தில் மனு தாக்கல்செய்திருந்தார்.

இந்த மனுவிற்கு எதிர்ப்புத் தெரிவித்து சுங்கத் துறை சார்பில் நீதிமன்றத்தில் பதில் மனு தாக்கல்செய்யப்பட்டது. அதில், தங்கம் கடத்தல் தொடர்பான முக்கியமான தகவல்களை சிவசங்கர் தெரிவித்ததாகக் கூறியுள்ளது.

இந்நிலையில், எம். சிவசங்கரின் பிணை மனு கேரள உயர் நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வருகிறது. இதனையடுத்து, இதே வழக்கில் தனக்குப் பிணை வழங்கக்கோரி கொச்சியில் உள்ள சிறப்பு நீதிமன்றத்தில் தாக்கல்செய்த மனுவை எம். சிவசங்கர் திரும்பப் பெற்றுக்கொண்டார்.

இதையும் படிங்க: முழு அடைப்பு போராட்டம் - மக்களின் ஆதரவு கோரும் விவசாயிகள்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.