ETV Bharat / bharat

Today Gold Rate: தங்கம் விலை குறைந்தது! எவ்வளவு தெரியுமா? - Gold Rate

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 320 ரூபாய் குறைந்து 45 ஆயிரத்து 200 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Gold
Gold
author img

By

Published : Apr 6, 2023, 10:26 AM IST

Updated : Apr 6, 2023, 12:44 PM IST

சென்னை : அண்மைக் காலமாக தங்கம் விலை அதிகரித்து உச்சம் தொட்டு காணப்பட்ட நிலையில் இன்று (ஏப்.6) சற்று விலை குறைந்து நிம்மதி அடையச் செய்து உள்ளது. கடந்த சில நாட்களாக தங்கத்தின் விலை ஏற்ற இறக்கத்துடன் போக்கு காட்டி வருகிறது. சர்வதேச சந்தையில் நிலவும் ஸ்திரத்தன்மையற்ற சூழல், அமெரிக்காவில் நிலவும் நிதி நெருக்கடி மற்றும் பொருளாதார மந்த நிலை, அதனால் இந்திய ரூபாயின் மதிப்பில் ஏற்படும் ஏற்ற இறக்க சூழல் உள்ளிட்ட காரணிகளால் தங்கத்தின் விலையில் அடிக்கடி மாற்றம் ஏற்படுகிறது.

அமெரிக்காவின் வங்கிகள் கடும் பொருளாதார நெருக்கடிகளை சந்தித்து உள்ளன. அமெரிக்காவின் சிலிகான் வேலி வங்கி மற்றும் சிக்னேச்சர் ஆகிய வங்கிகள் திவாலாகின. இரு வங்கிகள் திவாலானதை அடுத்து சுதாரித்துக் கொண்ட அமெரிக்கர்கள் தங்களது முதலீடுகளை வேறு பக்கம் திருப்பி உள்ளனர்.

தங்கத்தின் மீது அதிகப்படியிலான முதலீடுகள் காரணமாக சர்வதேச சந்தையில் அதன் மதிப்பு ஏற்றம் கண்டு வந்தது. நேற்று முன்தினம் (ஏப்.04) சர்வதேச சந்தையில் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 2020 அமெரிக்க டாலர்கள் வரை விலை உயர்ந்து காணப்பட்ட நிலையில் அது தற்போது சற்று குறைந்து உள்ளது.

சர்வதேச சந்தையில் ஒரு அவுன்ஸ் தங்கம் 2 ஆயிரத்து 11 அமெரிக்கா டாலர்களாக விலை குறைந்தது. இதனால் இந்திய சந்தையில் தங்கத்தின் மீதான விலை உயர்வு தற்காலிகமாக தடுக்கப்பட்டு உள்ளது. அதேநேரம் ரிசர்வ் வங்கியின் நிதிக் கொள்கை கூட்டத்தில் வங்கிகளுக்கான ரெப்போ ரேட் வட்டி விகிதம் உயர்த்தப்படாதது கூட தங்கம் விலை குறைவுக்கு காரணம் என்று கூறலாம்.

இதன் காரணமாக சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை விலை குறைந்து காணப்படுகிறது. இன்றைய (ஏப்.6) நிலவரப்படி, சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 320 ரூபாய் உயர்ந்து 45 ஆயிரத்து 200 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேநேரம் கிராமுக்கு 40 ரூபாய் உயர்ந்து 5 ஆயிரத்து 650 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

தங்கத்தை தொடர்ந்து வெள்ளியும் இன்று விலை குறைந்து காணப்பட்டது. வெள்ளி ஒரு கிராமுக்கு 70 காசுகள் குறைந்து 80 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிலோ வெள்ளி 80 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

வரும் 22ஆம் தேதி அட்சய திருதியை நாள் வர உள்ள நிலையில், தங்கத்தின் விலை தொடர்ந்து உச்சம் தொடும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல் வரும் சித்திரை மற்றும் வைகாசி மாதங்களில் பெரும்பாலான வீடுகளில் திருமணங்கள் நடைபெறும் என்ற நிலையில் தங்கம் விலை உயரும் என்பதால் பெண்களிடையே கலக்கத்தையும் கவலையும் ஏற்படுத்தி உள்ளது.

இதையும் படிங்க : நமீபியா நாட்டு சிவிங்கிப் புலி மாயம் - என்ன நடந்தது?

Last Updated : Apr 6, 2023, 12:44 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.