ETV Bharat / bharat

"விளைவுகளை சந்திப்பீர்கள்" ட்விட்டருக்கு இறுதி எச்சரிக்கை விடுத்த இந்திய அரசு - ட்விட்டருக்கு அரசு நோட்டீஸ்

புதிய சமூக வலைதளக் கொள்கைகளை பின்பற்ற அதை கண்காணிக்க உரிய அலுவலர்களை நியமிக்க வேண்டும் என ட்விட்டர் நிறுவனத்திற்கு இந்திய அரசு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

Twitter
Twitter
author img

By

Published : Jun 5, 2021, 4:51 PM IST

இந்தியாவில் சமூக வலைதளப் பயன்பாட்டிற்கு என பல்வேறு புதிய விதிமுறை வகுத்த ஒன்றிய மின்னணு தகவல் தொழில்நுட்ப அமைச்சகம், அதை அனைத்து சமூக வலைதள நிறுவனங்களும் முறையாக பின்பற்ற காலக்கெடு நிர்ணயம் செய்தது.

இந்த சூழலில் அரசின் விதிமுறைகளில் சில மாற்றங்கள் தேவை என ட்விட்டர், வாட்ஸ் ஆப் உள்ளிட்ட நிறுவனங்கள் எதிர்ப்பு காட்டிவந்தன. இதுதொடர்பாக நீதிமன்றங்களில் வழக்குகள் தொடரப்பட்ட நிலையில், அரசின் விதிமுறையை பின்பற்றி நடக்க வேண்டும் என ட்விட்டருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்திய அரசு இறுதி நோட்டீஸ்

இந்நிலையில், ட்விட்டர் நிறுவனத்திற்கு இந்திய அரசு இறுதி எச்சரிக்கை அளித்து நோட்டீஸ் ஒன்றை அனுப்பியுள்ளது. அதில், புதிய விதிமுறைகளை பின்பற்றவும் அதை கண்காணிக்க இந்தியாவைச் சேர்ந்த நபர்களை அலுவலர்களாக நியமிக்க வேண்டும். இதை செய்யத் தவறினால் உரிய விளைவுகளை சந்திக்க நேரிடும் என எச்சரித்துள்ளது.

முன்னதாக இன்று (ஜூன் 5) காலை துணை குடியரசு தலைவர் வெங்கய்யா நாயுடுவின் ட்விட்டர் கணக்கில் புளூ டிக் நீக்கப்பட்டு, அது சர்ச்சையாக மாறியப் பின்னர் திருப்பித் தரப்பட்டது.

இதையும் படிங்க: இன்று உலக சுற்றுச்சுழல் நாள்: பிரமாண்ட மணல் சிற்பத்துடன் விழிப்புணர்வு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.