டெல்லி: கோ ஃபர்ஸ்ட் ஏர்லைன்ஸ் (Go First Airlines) நிறுவனத்தில் கடை நிலை ஊழியர்களிலிருந்து மேல்மட்ட ஊழியர்கள் வரை சுமார் 4,200 பணியாளர்கள் பணிபுரிகின்றனர். இந்நிறுவனம் தனது செயல்பாட்டின் மூலம், 2021-2022 நிதியாண்டின் மொத்த வருவாயாக ரூ. 4,183 கோடி பணமதிப்பைப் பதிவுசெய்துள்ளது. இந்த நிலையில், கோ ஃபர்ஸ்ட் ஏர்லைன்ஸ் விமானங்களின் ஒரு சில தேர்ந்தெடுக்கப்பட்ட வழித்தடங்களில் பயணக் கட்டணங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளது, பயணிகளிடையே அதிகப்படியான அழுத்தத்தை ஏற்படுத்தியதாக அறிக்கைகள் வந்துள்ளன.
அதன் தொடர்ச்சியாக, கோ ஃபர்ஸ்ட் ஏர்லைன்ஸ் நிறுவனம் தனது டிவிட்டர் பக்கத்தில் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில், "தவிர்க இயலாத செயல்பாட்டுக் காரணங்களால், ஆகஸ்ட் 31 வரை திட்டமிடப்பட்ட கோ ஃபர்ஸ்ட் விமானங்களின் பயணங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. விமானம் ரத்து செய்யப்பட்டதால், பயணிகளின் பயணத் திட்டங்களுக்கு இடையூறு ஏற்பட்டிருக்கலாம் என்பதை ஒப்புக்கொள்கிறோம். மேலும், கோ ஃபர்ஸ்ட் ஏர்லைன்ஸ் நிறுவனத்தால் முடிந்த அனைத்து உதவிகளையும் வழங்கவும் இது குறித்த கூடுதல் தகவல்களை அறிய http://shorturl.at/jlrEZ என்ற இனைய முகவரியை நாடவும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், கோ ஃபர்ஸ்ட் ஏர்லைன்ஸ் நிறுவனம் குறிப்பிட்டுள்ள இனைய முகவரியில், பயணிகளுக்கான உடனடி தீர்வு மற்றும் பயணத் திட்டங்களைப் புதுப்பிப்பதற்கான விண்ணப்பங்களை வெளியிட்டுள்ளது. மேலும், விரைவில் முன்பதிவுகளை மீண்டும் தொடங்க முடியும் என்றும் கோ ஃபர்ஸ்ட் விமான நிறுவனம் தெரிவித்துள்ளது.
-
Due to operational reasons, Go First flights until 31st August 2023 are cancelled. We apologise for the inconvenience caused and request customers to visit https://t.co/FdMt1cRR4b for more information. For any queries or concerns, please feel free to contact us. pic.twitter.com/aVqVfhzF9I
— GO FIRST (@GoFirstairways) August 28, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data="
">Due to operational reasons, Go First flights until 31st August 2023 are cancelled. We apologise for the inconvenience caused and request customers to visit https://t.co/FdMt1cRR4b for more information. For any queries or concerns, please feel free to contact us. pic.twitter.com/aVqVfhzF9I
— GO FIRST (@GoFirstairways) August 28, 2023Due to operational reasons, Go First flights until 31st August 2023 are cancelled. We apologise for the inconvenience caused and request customers to visit https://t.co/FdMt1cRR4b for more information. For any queries or concerns, please feel free to contact us. pic.twitter.com/aVqVfhzF9I
— GO FIRST (@GoFirstairways) August 28, 2023
முன்னதாக மே 2 அன்று கோ ஃபர்ஸ்ட் ஏர்லைன்ஸ் அதன் விமானங்களை ரத்துசெய்து, தேசிய நிறுவன சட்ட தீர்ப்பாயத்தில் (NCLT-National Company Law Tribunal) தன்னார்வ திவால் நிலை (voluntary bankruptcy) செயல்முறைக்கு விண்ணப்பித்தது என்பதும், சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகம் (DGCA-Directorate General of Civil Aviation) இடைக்கால நிதியுதவி மற்றும் விமானம் திட்டமிடலை ஒழுங்குபடுத்தும் அங்கீகாரம் ஆகியவற்றின் அடிப்படையில் திட்டமிடப்பட்ட விமானச் செயல்பாடுகளை கோ ஃபர்ஸ்ட் ஏர்லைன்ஸ் 15 விமானங்கள் மற்றும் 114 தினசரி விமானங்களை மீண்டும் இயக்கலாம் என்று அனுமதித்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: Vignesh Shivan - Nayanthara: உயிர், உலகத்தோடு ஓணம் கொண்டாடிய விக்னேஷ்- நயன்தாரா தம்பதி.. வைரலான புகைப்படங்கள் !