சீதாபூர் பகுதியை சேர்ந்தவர் 15 வயது சிறுமி. இவர் நேற்றிரவு தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இச்சம்பவம் குறித்து, அருகில் உள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். விசாரணையில், அப்பகுதியை சேர்ந்த 17 வயது சிறுவன், சிறுமிக்கு தொடர்ந்து பாலியல் தொல்லை செய்துள்ளார். இதனால், மனமுடைந்த சிறுமி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டதாக தெரியவந்தது.
புகாரின் அடிப்படையில் சிறுவன் கைது செய்யப்பட்டான். வழக்குப்பதிவு செய்து கண்காணிப்பாளர் ஆர்.பி. சிங், ஏஎஸ்பி நோர்த் மேற்கொண்டு விசாரணை நடத்திவருகின்றனர்.
இதையும் படிங்க: மீண்டும் சொந்த மண்ணில் தொடரை வென்ற இந்தியா