உத்தரபிரதேச மாநிலம் அலிகார் மாவட்டத்தின் ரோரவர் காவல் நிலைய பகுதியில் அல் துவா என்ற இறைச்சித் தொழிற்சாலை செயல்பட்டு வந்தது. இங்கு நேற்று அமோனியா வாயு கசிந்துள்ளது. இதனால் தொழிற்சாலையில் இருந்தவர்களுக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டுள்ளது.
எனவே இவர்கள் அருகிலுள்ள ஜெயின் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். தொடர்ந்து சம்பவ இடத்திற்கு சென்ற மாவட்ட மாஜிஸ்திரேட் இண்டர் விக்ரம் சிங் மற்றும் எஸ்எஸ்பி கலாநிதி நைதானி ஆகியோர் தொழிற்சாலையை ஆய்வு செய்தனர்.
இதுகுறித்து மாஜிஸ்திரேட் இண்டர் விக்ரம் சிங் கூறுகையில், “வாயு கசிந்தபோது தொழிலாளர்கள் இறைச்சியை ஏற்றுமதி செய்து கொண்டிருந்தனர். சிலர் மயங்கி விழுந்துள்ளனர். ஆனால், வாயு கசிவுக்கான காரணம் இன்னும் அறியப்படவில்லை. இதுதொடர்பாக விசாரணைக்குழு அமைத்து நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.
இதையும் படிங்க: தேவரியம்பாக்கம் சிலிண்டர் குடோன் தீ விபத்தில் உயிரிழப்பு எண்ணிக்கை 2ஆக உயர்வு