பாட்னா: கனமழை காரணமாக கங்கை நதியின் நீர் மட்டம், அபாய அளவை விட உயர்ந்துள்ளது. இதனால் கங்கை நதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, நதியின் கதவணைகள் நீரில் மூழ்கியுள்ளன.
வெள்ளம்
இந்நிலையில் பாட்னாவில் விடாமல் பெய்து வரும் கனமழையால் தாழ்வான பகுதிகளின் வெள்ள நீர் சூழ்ந்து, பல கட்டடங்கள் நீரில் மூழ்கியுள்ளன. இவ்வாறு மழை நிக்காமல் பெய்தால், இந்த நிலை மேலும் மோசமடையக்கூடும் என்று அப்பகுதி மக்கள் கவலை தெரிவித்தனர்.
வானிலை மையம் எச்சரிக்கை
முன்னதாக ஜூலை 31 ஆம் தேதி அன்று, இந்திய வானிலை மையமானது, பிகாரில் பல்வேறு பகுதிகளுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுத்திருந்தது. மேலும் ஆகஸ்ட் 4 ஆம் தேதி வரை பிகாரில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யும் எனவும் அறிவித்திருந்தது.
அந்த வகையில் வங்கக் கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, நாட்டின் கிழக்கு பகுதிகளை நோக்கி நகர்வதால், தற்போது கனமழை பெய்தது வருகிறது.
இதையும் படிங்க: மேற்கு, கடலோர மாவட்டங்களில் லேசான மழை - வானிலை ஆய்வு மையம்