ETV Bharat / bharat

'ரெம்டெசிவிர்' மருந்து குப்பியில் குளுக்கோஸ் கரைசல்: மோசடி கும்பல் கைது! - 'ரெம்டெசிவிர்' மருந்து குப்பியில் குளுக்கோஸ் கரைசல்

இந்தூர்: குளுக்கோஸ் கரைசலை மருந்து குப்பிகளில் அடைத்து 'ரெம்டெசிவிர்' என விற்பனை செய்த ஐந்து பேரை இந்தூர் காவல் துறை மற்றும் நகர குற்றப்பிரிவு அலுவலர்கள் இன்று(ஏப்.25) கைது செய்துள்ளனர்.

போலி கரோனா மருந்து
போலி கரோனா மருந்து
author img

By

Published : Apr 25, 2021, 7:17 PM IST

ஆபத்தான நிலையில் இருக்கும் கரோனா நோயாளிகளுக்கு 'ரெம்டெசிவிர்' மருந்தை மருத்துவர்கள் பயன்படுத்துகின்றனர். ஆனால், சிலர் இதைப் பணத்திற்கு ஆசைப்பட்டு கள்ளச்சந்தையில் விற்பனை செய்வது வாடிக்கையாகி வருகிறது.

இந்நிலையில், கரோனா நோயாளிகளின் உயிர் காக்கும் மருந்தான 'ரெம்டெசிவிர்' பெயரில் போலி மருந்தை விற்ற ஐந்து பேரை இந்தூர் காவல் துறை மற்றும் நகர குற்றப்பிரிவு அலுவலர்கள் இன்று கைது செய்தனர்.

கைதான ஐவரில் உஜ்வால் படேல், அமித் அவஸ்தி ஆகிய இருவரை இந்தூர் காவல் துறையினரும், மன்சிங் மீனா, அங்கித் பட்வாரி மற்றும் பஜ்ரங் ரத்தோர் என்ற மூவரையும் குற்றப்பிரிவு காவல் துறையினரும் கைது செய்தனர்.

மருந்துவத்துறையில் ஒரு 'ரெம்டெசிவிர்' ரூபாய் 2 ஆயிரத்து 800 முதல் 2 ஆயிரத்து 899 வரை விற்பனை செய்யப்படும் நிலையில், இந்தக் கும்பல் குளுக்கோஸ் கரைசலை 20 ஆயிரம் ரூபாய்க்கு விற்று வந்தது விசாரணையில் தெரியவந்துள்ளது.

லாசுடியா காவல் நிலையத்தில் ஒரு நபர் புகார் அளித்ததை அடுத்து இச்சம்பம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. புகாரளித்தவர் 'ரெம்டெசிவிர்' மருந்தை குற்றஞ்சாட்டப்பட்டவரிடம் இருந்து வாங்கி மருத்துவரிடம் கொடுத்துள்ளார்.

மருத்துவர் அம்மருந்தை ஆராய்ந்து அது 'ரெம்டெசிவிர்' மருந்தில்லை எனவும், குளுக்கோஸ் கரைசல் என்றும் விளக்கியுள்ளார். கைதான ஐவரும் கரோனா மருந்து தட்டுப்பாட்டை பயன்படுத்தி மோசடியில் ஈடுபட்ட நிலையில் காவல் துறை அவர்களைக் கைது செய்து, அவர்களிடமிருந்த போலி மருந்துகளைக் கைப்பற்றினர்.

இது போன்ற போலி மருந்து புகார்கள் அதிகம் வருவதையடுத்து, அம்மாநிலம் இதைக் கையாள தனிப்படை அமைத்துள்ளது.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.