கரோனா வைரஸின் இரண்டாம் அலை இந்தியாவில் தீவிரமடைந்துள்ளது. பரவலைத் தடுப்பதற்கான தேவையான நடவடிக்கைகளை மத்திய அரசு எடுத்துவருகிறது. முகக்கவசம் அணியவும், தகுந்த இடைவெளியை பின்பற்றவும் மக்களுக்கு தொடர்ந்து அறிவுறுத்தப்படுகிறது.
டெல்லியில் நடைபெற்ற 40ஆவது முதியோர் பாதுகாப்பு தின விழாவில், மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார்.
அப்போது பேசிய அவர், ”ஹைட்ரோக்ஸிகுளோரோகுயின் மருந்து இந்தியாவில் இருந்து 150 நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை இந்தியாவில் 7.5 கோடி பேருக்கு மேல் தடுப்பூசி போடப்பட்டுள்ளது. வெளிநாடுகளுக்கு 6.5 கோடி டோஸ் தடுப்பூசிகள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன.
இந்தியாவில் ஒரே ஒரு கரோனா பரிசோதனை ஆய்வகம் இருந்த நிலையில், தற்போது 2000க்கும் மேற்பட்ட ஆய்வகங்கள் உள்ளதாகவும் அவர் கூறினார்.