பெலகாவி(கர்நாடகா): கர்நாடகா- மகாராஷ்டிரா எல்லைப்பகுதியில் அமைந்துள்ள கிடாவாடா அருவிக்கு சுற்றுலா சென்ற பயணிகளில் இருந்த 5 பெண்கள் அருவி அருகே சென்று செல்பி எடுக்க முயன்ற போது அருவிக்குள் தவறி விழுந்தனர். அதில் 4 பெண்கள் அருவியில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் ஒரு பெண் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார்.
பெலகாவி மாவட்டத்தில் இருந்து 40 பெண்கள் அடங்கிய குழு இன்று (நவ.26) கிடாவாடா அருவிக்கு சுற்றுலா சென்றிருந்தது. இந்நிலையில் அருவியில் மூழ்கி உயிரிழந்தவர்களில் உஜ்வால் நகரைச் சேர்ந்த ஆசியா முஜாவர் (17), அனகோலாவைச் சேர்ந்த குட்ஷியா ஹசம் படேல் (20), ருக்காஷர் பிஸ்டி (20), ஜபாத் காலனியை சேர்ந்த தஸ்மியா (20) ஆகியோர் என அடையாளம் காணப்பட்டது. இறந்த பெண்களின் உடல் பெலகவி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு எடுத்துச்செல்லப்பட்டது.
இதையும் படிங்க:எரிபொருள் தீர்ந்ததால் ஆம்புலன்சை தள்ளும் அவலம் - நோயாளி அதிர்ச்சி மரணம்...