ஹரியானா மாநிலம் சோனிப்பேட்டில் போதை பொருளை கடத்திய நால்வரை அம்மாநில காவல் துறையினர் கைது செய்துள்ளனர். ஒன்பது கோடி ரூபாய் மதிப்புள்ள 1.74 கிலோ ஹெராயின் அவர்களிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
தஹிஸ்ரா அருகே போதை பொருளை கடத்திய விகாஸ், சந்தீப், முகதார், அரவிந்த் ஆகியோர் கைது செய்யப்பட்டதாக காவல் துறை அலுவலர்கள் தகவல் தெரிவித்துள்ளனர். டெல்லியிலிருந்து ஹரியானாவுக்கு போதைப் பொருள் கடத்தப்படுவதாக புலனாய்வு துறையினருக்கு தகவல் கிடைத்தது.
இதனைத் தொடர்ந்து, துணை உதவி ஆய்வாளர் ரமேஷ் காத்ரி தலைமையிலான குழு சோதனையில் இறங்கியபோது கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.