காந்திநகர்: குஜராத் மாநிலம் வடோதராவில் உள்ள ரசாயன தொழிற்சாலையின் கொதிகலன் இன்று(டிசம்பர் 24) வெடித்து விபத்து ஏற்பட்டது. இதனால் 15 பேருக்கு தீவிர காயங்கள் ஏற்பட்டன. இதையடுத்து அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
அங்கு சிகிச்சை பலனின்றி 4 வயது சிறுமி உள்பட நான்கு பேர் உயிரிழந்தனர். இதுகுறித்து காவல்துறையினர் கூறுகையில், காலை 9.30 மணியளவில் கொதிகலன் வெடித்துள்ளது. இதனால், தொழிலாளர்கள் மட்டுமின்றி, அருகில் சென்றுகொண்டிருந்த ஊர் மக்களும் பாதிக்கப்பட்டுள்ளனர். வெடிப்புக்கான காரணத்தை தடயவியல் குழு விரைவில் தெரிவிக்கும் எனத் தெரிவித்தனர். மேலும் குஜராத்தின் பஞ்சமஹால் மாவட்டத்தில் இதேபோன்ற தொழிற்சாலை வெடிப்பில் ஏழு பேர் பலியாகியது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: பஞ்சாப் நீதிமன்றத்தில் குண்டுவெடிப்பு: ஒருவர் பலி, நால்வர் படுகாயம்