ETV Bharat / bharat

இஸ்லாமியர்களின் கடைகள் சூறை - ஶ்ரீராம சேனா அமைப்பைச் சேர்ந்த 4 பேர் கைது

அனுமன் கோயிலுக்கு அருகே இருந்த இஸ்லாமியர்களின் கடைகளை அடித்து நொறுக்கிய வழக்கில், ஶ்ரீராம சேனா அமைப்பைச் சேர்ந்த 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

author img

By

Published : Apr 11, 2022, 4:33 PM IST

கர்நாடகா
கர்நாடகா

கர்நாடகா: கர்நாடக மாநிலம் தார்வாட் (Dharwad)தாலுக்காவில் கடந்த சனிக்கிழமை, நுக்கிகேரி அனுமன் கோயில் வளாகத்திற்கு அருகே இருந்த நான்கு இஸ்லாமியர்களின் கடைகளை ஶ்ரீராம சேனா அமைப்பைச் சேர்ந்தவர்கள் சூறையாடினர்.

இந்து அல்லாதவர்கள் கோயில் வளாகத்திற்கு அருகே கடை வைத்திருக்க கூடாது என்பதற்காக இவர்கள் இந்த தாக்குதலை நடத்தியதாக தெரிகிறது. இந்தத் தாக்குதலில் நபிசாப் என்பவரது கடையில் இருந்த சுமார் ஆறு குவிண்டால் தர்பூசணி பழங்கள் சேதமடைந்ததாக தெரிகிறது.

இது தொடர்பாக நபிசாப், போலீசில் புகார் அளித்தார். இதையடுத்து விசாரணை மேற்கொண்ட போலீசார், ஶ்ரீராம சேனா அமைப்பைச் சேர்ந்த 4 பேரை கைது செய்தனர். இந்தத் தாக்குதல் சம்பவத்தால் பெரும் நஷ்டத்துக்கு ஆளாக வியாபாரி நபிசாப்-க்கு, கர்நாடக முன்னாள் முதலமைச்சர் குமாரசாமி நிதியுதவி வழங்கி ஆறுதல் கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதையும் படிங்க: ஒழுங்கீனத்தை சகித்துக் கொள்ள மாட்டோம்- ராகுல் காந்தி!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.