ETV Bharat / bharat

Actor Innocent: பிரபல திரைப்பட நடிகர் இன்னசென்ட் காலமானார்!

மலையாள திரையுலகின் புகழ்பெற்ற நடிகரும் முன்னாள் எம்.பியுமான இன்னசென்ட் உடல்நலக்குறைவால் காலமானார். அவரது மறைவிற்கு அரசியல் கட்சி தலைவர்களும், திரையுலகினரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Former Lok Sabha MP and famous film actor Innocent passed away

author img

By

Published : Mar 27, 2023, 11:24 AM IST

Updated : Mar 27, 2023, 11:36 AM IST

கொச்சி: முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், பிரபல திரைப்பட நடிகருமான இன்னசென்ட்(Innocent) தனது 75-வது வயதில் காலமானார். இன்னசென்ட் வீரத் தெகெதலா தொண்டை புற்று நோயால் பாதிக்கப்பட்டு குணமடைந்தார். இந்நிலையில் மீண்டும் உடல்நலம் பாதிக்கப்படவே, பரிசோதனையில் அவருக்கு மீண்டும் புற்றுநோய் இருப்பது உறுதியானது. இந்நிலையில் கொச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தவர் சிகிச்ச பலனின்றி நேற்று இரவு உயிரிழந்தார்.

இன்னசென்ட் பிப்ரவரி 28, 1948 அன்று திருச்சூரில் உள்ள இரிஞ்சாலக்குடாவில் வாரித் தெகெதலாவின் மகனாகப் பிறந்தார். இன்னசென்டின் பெற்றோருக்கு 8 குழந்தைகள். அதில் ஐந்தாவதாக பிறந்த இன்னசென்ட், அவர்களுக்கு மூன்றாவது மகன் ஆவார். பல ஆண்டுகளாக புற்றுநோயுடன் போராடி வந்த இன்னசென்ட் புற்றுநோய்க்கு எதிரான தனது போராட்டத்தில் அனைவருக்கும் முன்மாதிரியாகவும் உத்வேகமாகவும் இருந்தார்.

ஏழ்மை நிறைந்த பின்னணியில் வளர்ந்து மலையாள சினிமாவையே வசப்படுத்திய இன்னசென்ட், மலையாள சினிமா நடிகர்களின் அமைப்பான அம்மா(AMMA) -வின் தலைவராக கேரளாவில் முக்கியமான ஆளுமையாக மாறினார். எந்த நேரத்திலும் நகைச்சுவையை அசாதாரணமான முறையில் கையாளும் இன்னசென்ட்டின் திறமையை மலையாள சினிமா உலகம் பல ஆண்டுகளாக அனுபவித்து வருகிறது.

இவர் தமிழில் லேசா லேசா உள்ளிட்ட படங்களில் குணாச்சித்திர வேடங்களில் நடித்துள்ளார். மலையாளம், தமிழ், இந்தி மொழிகளில் சுமார் 750 படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள இன்னசென்ட்டின் திறமைக்கு மாநில அரசு மூன்று விருதுகளும் வழங்கி கௌரவித்துள்ளது. 2021- சிறந்த நையாண்டிப் படைப்பான 'இரிஞ்சலக்குடகு சுட்டும்' நாவலுக்கு கேரள சாகித்ய அகாடமி விருதும் இன்னசென்ட்டுக்கு கிடைத்தது.

2014 மக்களவைத் தேர்தலில் சிபிஎம் ஆதரவுடன் சாலக்குடி தொகுதியில் சுயேட்சையாக போட்டியிட்ட இன்னசென்ட் அமோக வெற்றி பெற்று நாடாளுமன்றத்திலும் தனது திறமையை வெளிப்படுத்தினார். கேரளாவின் பொதுப் பிரச்சினைகளை குறித்து இன்னசென்ட் மக்களவையில் தொடர்ந்து பேசினார். அப்போது புற்றுநோய்க்கு எதிரான அவரது போராட்டம் தேசிய கவனத்தை பெற்றது. இன்னசென்ட் 2019ல் மீண்டும் சாலக்குடி தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்தார்.

ராம்ஜி ராவ் ஸ்பீக்கிங், மன்னார் மத்தாய் ஸ்பீக்கிங், கிலுக்கும், காட்பாதர், வியட்நாம் காலனி, தேவாசுரம் போன்ற சூப்பர் ஹிட் படங்களில் இன்னசென்டின் நடிப்பு மலையாள சினிமா இருக்கும் வரை நினைவில் இருக்கும். காபுலிவாலா, கஜகேசரியோகம், மிதுனம், மழவில்காவடி, மனசினகரே, துருப்புகுலன், இராசதந்திரம், மகாசமுத்திரம் போன்ற படங்களில் நகைச்சுவை கலந்த சீரியஸ் வேடங்களில் அவரது நடிப்பு சிறப்பானது. இன்னசென்ட் சூப்பர் ஸ்டார்களுடன் ஹீரோவாகவும் வில்லனாகவும் ஜொலித்ததும் படத்திற்கு கிடைத்த வெற்றிதான்.

  • The passing of actor, parliamentarian, and fellow comrade Innocent leaves us deeply saddened. His effortless onscreen performances and strong political interventions have made him an indelible part of our cultural memory. In mourning with family, friends, and fellow film lovers. pic.twitter.com/90Ta8m4aNE

    — Pinarayi Vijayan (@pinarayivijayan) March 27, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

இன்னசென்டின் மறைவை அடுத்து கேரள முதல்வர் பினராயி விஜயன், "நடிகரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், சக தோழருமான இன்னசென்ட்டின் மறைவு எங்களை ஆழ்ந்த வருத்தத்தில் ஆழ்த்துகிறது" என அவரது ட்விட்டர் பக்கத்தில் இரங்கல் செய்தி வெளியிட்டுள்ளார். நடிகர் பிரித்விராஜ், "சினிமா வரலாற்றில் ஒரு முக்கிய அத்யாயம் முடிவுற்றது" என அவரது ட்விட்டர் பக்கத்தில் இரங்கல் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: "ஒரு தியாகியின் மகனை துரோகி என்று கூறுவதா?" - பிரியங்கா காந்தி ஆவேசம்!

Last Updated : Mar 27, 2023, 11:36 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.