ETV Bharat / bharat

அமலாக்கத்துறை விசாரணைக்கு முன்னாள் அமைச்சர் அனில் தேஷ்முக் ஆஜர்! - மகாராஷ்டிரா மாநில முன்னாள் உள்துறை அமைச்சர்

போலி பண பரிமாற்றம், பண மோசடி வழக்கில் சிக்கிய மகாராஷ்டிர மாநில முன்னாள் உள்துறை அமைச்சர் அனில் தேஷ்முக், இன்று அமலாக்கத்துறை அலுவலகத்தில் விசாரணைக்காக ஆஜரானார்.

Former Home Minister Anil Deshmukh, Enforcement Directorate, Anil Deshmukh, Nationalist Congress Party, அனில் தேஷ்முக், மகாராஷ்டிரா மாநில முன்னாள் உள்துறை அமைச்சர், அமலாக்கத்துறை
Former Home Minister Anil Deshmukh
author img

By

Published : Nov 1, 2021, 5:46 PM IST

மும்பை: மும்பையில் தொழிலதிபர் முகேஷ் அம்பானி வீட்டின் அருகே வெடிப்பொருட்கள் நிரப்பப்பட்ட கார் நிறுத்தப்பட்டது தொடர்பாக காவல்துறை அதிகாரி சச்சின்வாசி கைது செய்யப்பட்டார்.

இதனைத்தொடர்ந்து மும்பை மாநகர காவல் ஆணையராக இருந்த பரம்வீர் சிங் பணியிடமாற்றம் செய்யப்பட்டார். அப்போது முதலமைச்சர் உத்தவ் தாக்கரேவுக்கு கடிதம் எழுதிய பரம்வீர் சிங், உள்துறை அமைச்சர் அனில் தேஷ்முக் பார்கள், விடுதிகள் மூலம் ஒரு மாதத்திற்கு 100 கோடி ரூபாய் வசூலிக்குமாறு சச்சின் வாசியை கேட்டுக்கொண்டதாக தெரிவித்திருந்தார்.

இதன்பிறகு அனில் தேஷ்முக் தனது பதவியை ராஜினாமா செய்த நிலையில், ஒன்றிய புலனாய்வுப் பிரிவு வழக்குப்பதிவு செய்தது. அதன் தொடர்ச்சியாக பணப்பரிமாற்றம் தொடர்பாக அமலாக்கத்துறையும் வழக்குப்பதிவு செய்தது. இச்சூழலில் மும்பை மற்றும் நாக்பூரில் உள்ள அனில் தேஷ்முக் வீடுகளில் அமலாக்கத்துறை அலுவலர்கள் சோதனை நடத்தினர்.

முன்னாள் உள்துறை அமைச்சர் அனில் தேஷ்முக் மீது பண மோசடி வழக்கை விசாரிக்கும் அமலாக்கதுறை, அவரது உதிவியாளர்களை விசாரணைக்கு அழைத்துச் சென்றது.

சுமார் 50க்கும் மேற்பட்ட பார் உரிமையாளர்களிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட ரூ.4 கோடி ரூபாயை அமலாக்க அலுவலர்கள் கண்டுபிடித்ததாகவும், உதவி ஆய்வாளர் சச்சின் வாசியால் சில மாதங்களில் திரட்டப்பட்டதாகவும் அமலாக்கதுறை வட்டாரங்கள் தெரிவித்தன.

இந்த பணம் மராட்டியத்திற்கு வெளியே அமைந்துள்ள சில ஷெல் நிறுவனங்கள் மூலம் தேஷ்முக் நிறுவனத்திற்கு கொண்டுவரப்பட்ட பணத்தை அமலாக்கத்துறை கண்டறிந்துள்ளது. இந்நிறுவனம் தேஷ்முக்கின் நெருங்கிய உறவினருக்கு சொந்தமானது.

இச்சூழலில், மகாராஷ்டிரா முன்னாள் உள்துறை அமைச்சர் அனில் தேஷ்முக் மீதான விசாரணை அறிக்கையில் திருத்தம் செய்ய லஞ்சம் வாங்கிய சிபிஐ அலுவலரையும், அனில் தேஷ்முக்கின் வழக்கறிஞரும் கைது செய்யப்பட்டனர்.

தற்போது, பல நாட்களாக ஆஜராகாமல் போக்கு காட்டி வந்த அனில் தேஷ்முக், இன்று (நவம்பர் 1) மும்பை அமலாக்கத்துறை அலுவலகத்தில் விசாரணைக்காக ஆஜரானார்.

இதையும் படிங்க: சிபிஐ அலுவலகத்தில் அனில் தேஷ்முக் ஆஜர்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.