ETV Bharat / bharat

புதுச்சேரியில் மலரவுள்ள பாஜக - முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி அதிரடி பேட்டி! - 2022 2023 Financial Statement

புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ் கட்சியை உடைத்து முதலமைச்சர் ரங்கசாமியை பிரதமர் மற்றும் அமித்ஷா ஆகியோர் வீட்டுக்கு அனுப்பும் நிலை வெகுதூரத்தில் இல்லை என்றும்; ரூ.3 லட்சம் கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக கூறும் பிரதமர் மோடி, 5 ஜி அலைக்கற்றை விவகாரத்தில் சிபிஐ விசாரணையை நடத்தத் தயாரா என புதுச்சேரி முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி கேள்வி எழுப்பி உள்ளார்.

Etv Bharat
Etv Bharat
author img

By

Published : Aug 8, 2022, 10:24 PM IST

புதுச்சேரியின் முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி இன்று (ஆக.7) செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது பேசிய அவர், டெல்லியில் நடந்த 'நிதி ஆயோக் கூட்டம்' பிரதமர் மோடி தலைமையில் நேற்று நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட பல மாநில முதலமைச்சர்கள் தங்கள் மாநில பிரச்னைகள் தொடர்பாக ஆலோசனை நடத்தினர். அப்போது பேசிய பிரதமர் மோடி, கூட்டாட்சி தத்துவம் பற்றி பேசினார்.

சர்வதிகார ஆட்யில் கூட்டாட்சி தத்துவம்? கடந்த 8 ஆண்டுகளுக்கு பிறகு கூட்டாட்சி தத்துவம் பிரதமருக்கு வந்துள்ளது. நாட்டில் சர்வாதிகார ஆட்சி நடத்திக்கொண்டு கூட்டாட்சி தத்துவம் பற்றி பேசுவது, 'சாத்தான் வேதம் ஓதுவதுபோல்' உள்ளது. மாநிலங்களில் இரட்டை ஆட்சி முறை இல்லாத வகையில் பிரதமர் செயல்படுவார் என நம்புகிறேன்.

5 ஜி அலைக்கற்றை ஏலத்தில் 1 லட்சத்து 50 ஆயிரம் கோடி ரூபாய் வருவாய் கிடைத்துள்ளது. மீதமுள்ள ரூ.3 லட்சம் கோடி ஏன் அரசுக்கு வருவாய் வரவில்லை? இதற்கு பிரதமர் என்ன சொல்ல போகிறார்? பிரதமர் தோராயமக ரூ.3 லட்சம் கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளதாகக் கூறிய அவர் இதில் சிபிஐ விசாரணை நடத்த பிரதமர் தயாரா? 5 ஜி அலைக்கற்றை விவகாரத்தில் மத்திய அரசு உடனடியாக சிபிஐ விசாரணையை தொடங்க வேண்டும் என்றார்.

பட்ஜெட்டில் கணக்கு சமர்ப்பித்தது எப்படி? 2022-23 இந்த ஆண்டுக்கான பட்ஜெட்டுக்கு மத்திய அரசு ஒப்புதல் வழங்காத நிலையில், முதலமைச்சர் ரங்கசாமி 2022-23 வரவு செலவு கணக்கை எப்படி சமர்ப்பிப்பார் என்று கேள்வி எழுப்பினார். புதுச்சேரியில் பாஜக கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது. ஆனால், கடந்த எங்களது ஆட்சியில் எப்படி ஒப்புதல் வழங்கப்படாமல் இருந்ததோ; அதேதான் தற்போதும் நடக்கிறது. ஆட்சி மாறினாலும் காட்சி மாறவில்லை.

ரூ.11 ஆயிரம் கோடி நிதி: இந்த விவகாரத்தில் நிதி கிடைக்குமா? ஒப்புதல் கிடைக்குமா? என முதலமைச்சர் ரங்கசாமி பதில் சொல்ல வேண்டும். ஒப்புதல் கிடைக்கவில்லை என்றால், ரூ.11 ஆயிரம் கோடி நிதி குறித்தநிலை என்ன? என்று தெரிவிக்க வேண்டும்.

என்.ஆர்.காங்கிரஸ் கட்சிக்கு பாஜகவால் ஆபத்து: முதலமைச்சர் ரங்கசாமியின் என்.ஆர்.காங்கிரஸ் கட்சியை உடைத்து பாஜக ஆட்சி அமைக்கும். முதலமைச்சர் ரங்கசாமியை பிரதமர் மற்றும் அமித்ஷா ஆகியோர் வீட்டுக்கு அனுப்பும் நிலை வெகு தூரத்தில் இல்லை. என்.ஆர். காங்கிரஸ் கட்சியை உடைக்கும் வேலையில் பாஜக ஈடுபட்டு வருகின்றனர் என்று தெரிவித்தார்.

மேலும் புதுச்சேரியில், 9 டன் ரேஷன் அரிசி கடத்தல் விவகாரத்தில் மாவட்ட தலைமை நீதிபதி மேற்பார்வையில் விசாரணை நடத்த வேண்டும். அப்போதுதான் யாரெல்லாம் இதில் தொடர்பில் உள்ளனர் என்ற உண்மை தெரியவரும். காவல்துறையை வைத்து விசாரணை நடத்தினால் உண்மை வெளிவராது.

விவசாயக் கடன்களை ரத்து செய்க: விவசாயிகளுக்கான கூட்டுறவு கடன்கள் முழுவதையும் அரசு ரத்து செய்யவேண்டும். இதுவரை பயிர்கள் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு பயிர் காப்பீட்டு தொகை வழங்கப்படவில்லை. பாஜக கூட்டணி அரசுதான் இதற்கு பொறுப்பேற்க வேண்டும். உடனடியாக விவசாயிகளுக்கான பயிர் காப்பீடு தொகையை வழங்க வேண்டும் எனவும் தெரிவித்தார்.

இதையும் படிங்க: ஓ.என்.ஜி.சி நிறுவனம் மீண்டும் பணிகளைத்தொடங்குவதைக்கண்டித்து பி.ஆர்.பாண்டியன் உண்ணாவிரதம் அறிவிப்பு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.