புதுச்சேரியில் மாநிலங்களவை உறுப்பினருக்கான தேர்தல் வரும் 4ஆம் தேதி நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 15ஆம் தேதி தொடங்கி இன்று (செப். 22) மாலை 3 மணியுடன் முடிவடைந்தது.
இந்நிலையில், தேசிய ஜனநாயகக் கூட்டணி கட்சி சார்பில், வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள செல்வகணபதி இன்று (செப். 22) முதலமைச்சர் ரங்கசாமி, கூட்டணிக் கட்சி சட்டப்பேரவை உறுப்பினர்கள் ஆதரவுடன் தனது வேட்புமனுவைத் தேர்தல் அலுவலர் முனுசாமியிடம் தாக்கல்செய்தார்.
வேட்புமனுக்கள் தள்ளுபடி
மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு எதிர்க்கட்சிகளான திமுக, காங்கிரஸ் சார்பில் யாரும் மனு தாக்கல்செய்யவில்லை. ஏற்கனவே சுயேச்சையாக மூன்று பேர் வேட்புமனு தாக்கல்செய்துள்ளனர்.
இவர்களுக்கு சட்டப்பேரவை உறுப்பினர்கள் யாரும் முன்மொழியாததால் தானாகவே அவர்களது வேட்புமனுக்கள் தள்ளுபடி செய்யப்படும். இதனால் பாஜக வேட்பாளர் செல்வகணபதி, மாநிலங்களவை உறுப்பினராகப் போட்டியின்றித் தேர்வுசெய்யப்படவுள்ளார்.
இதையும் படிங்க: புதுச்சேரியில் உள்ளாட்சித் தேர்தலுக்கான தேதி அறிவிப்பு