டெல்லி: 73ஆவது குடியரசு த தின விழா இன்று (ஜன. 26) கொண்டாடப்படுவதையொட்டி, 2022ஆம் ஆண்டுக்கான பத்ம விருதுகள் ஒன்றிய அரசால் நேற்று (ஜன.25) அறிவிக்கப்பட்டது.
நான்கு பேருக்கு பத்ம விபூஷண், 17 பேருக்கு பத்ம பூஷண், 107 பேருக்கு பத்மஸ்ரீ என பல துறைகளில் சிறப்பான பங்களிப்பை அளித்த 128 பேர் அடங்கிய பட்டியலை ஒன்றிய அரசு வெளியிட்டுள்ளது.
எதிர்கட்சி தலைவர்களுக்கு விருது
இதில், முன்னாள் மேற்கு வங்க முதலமைச்சர் புத்ததேவ் பட்டாச்சார்யாவுக்கு பத்ம பூஷண் விருது அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், பத்ம பூஷண் விருதை பெற புத்ததேவ் பட்டாச்சார்யா மறுப்பு தெரிவித்துள்ளார்.
பொது விவகாரத் (Public Affairs) துறையின்கீழ் இவருக்கு பத்ம பூஷண் விருது அறிவிக்கப்பட்டிருந்து. இவரை போன்றே, காங்கிரஸ் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத்திற்கும் பொது விவகாரத் துறையின்கீழ் பத்ம பூஷண் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி பொலிட் பீரோவின் முன்னாள் உறுப்பினரான புத்ததேவ் பட்டாச்சார்யா, 2000ஆம் ஆண்டுமுதல் 2011ஆம் ஆண்டு வரை மேற்கு வங்க முதலமைச்சராக பதவி வகித்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: Padma awards 2022: பிபின் ராவத்திற்கு பத்ம விபூஷண், சுந்தர் பிச்சைக்கு பத்ம பூஷண் விருதுகள் அறிவிப்பு