மலப்புரம்: கேரள மாநிலம், மலப்புரம் மாவட்டத்தில் பூங்கோடு பகுதியில் அகில இந்திய கால்பந்து போட்டி நடைபெற்றது. இறுதிப்போட்டியைக் காண்பதற்கு ஆயிரத்திற்கும் மேலான பார்வையாளர்கள் வந்திருந்தனர். அங்கு பார்வையாளர்கள் அமர தற்காலிகமான அரங்கு உருவாக்கப்பட்டிருந்தது. இந்த அரங்கு மூங்கில் கட்டைகளால் கட்டப்பட்டிருந்தது.
அதிக அளவிலான பார்வையாளர்கள் வந்திருந்தனர். பூங்கோடு கால்பந்து மைதானத்தில் அமைக்கப்பட்டிருந்த கேலரி சனிக்கிழமை இரவு இடிந்து விழுந்தது. இந்த விபத்தில் போட்டியைக் காண வந்த 200-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். காயமடைந்தவர்கள் மஞ்சேரி மருத்துவக் கல்லூரியில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இப்பகுதியில் இரண்டு நாட்களாக கனமழை பெய்தது. இதனால் மழை மற்றும் மைதானத்தில் கூட்டம் அதிகமாக இருந்ததால் தற்காலிக கேலரி இடிந்து விழுந்ததாக முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. மேலும் போலீசார் மற்றும் தீயணைப்பு மீட்புப்படை வீரர்கள் சம்பவ இடத்தில் போதுமான உதவிகளை செய்துள்ளனர். இதுகுறித்து காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
-
#WATCH Temporary gallery collapsed during a football match in Poongod at Malappuram yesterday; Police say around 200 people suffered injuries including five with serious injuries#Kerala pic.twitter.com/MPlTMPFqxV
— ANI (@ANI) March 20, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data="
">#WATCH Temporary gallery collapsed during a football match in Poongod at Malappuram yesterday; Police say around 200 people suffered injuries including five with serious injuries#Kerala pic.twitter.com/MPlTMPFqxV
— ANI (@ANI) March 20, 2022#WATCH Temporary gallery collapsed during a football match in Poongod at Malappuram yesterday; Police say around 200 people suffered injuries including five with serious injuries#Kerala pic.twitter.com/MPlTMPFqxV
— ANI (@ANI) March 20, 2022
இதையும் படிங்க:Exclusive: மனித மூளையை செல்களின் அளவில் துல்லியமான வரைபடமாக உருவாக்க முயற்சி!