ETV Bharat / bharat

பட்ஜெட் நாளில் பாரம்பரியம் மிக்க இல்கல் கைத்தறி புடவையை அணிந்த நிதியமைச்சர்!

பட்ஜெட் தாக்கலின்போது, நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கர்நாடாவின் பாரம்பரியம் மிக்க தார்வாட் எம்பிராய்டரி போடப்பட்ட இல்கல் கைத்தறி புடவையை அணிந்திருந்தார். இந்த புடவை சுயதொழில் செய்யும் பெண்களால் எம்பிராய்டரி போடப்பட்டுள்ளது.

பட்ஜெட்
பட்ஜெட்
author img

By

Published : Feb 1, 2023, 8:06 PM IST

தார்வாட்: 2023-24ஆம் நிதி ஆண்டிற்கான நிதி நிலை அறிக்கை இன்று(பிப்.1) மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டது. நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்தார். பட்ஜெட் தாக்கலின்போது நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், கர்நாடகாவின் பாரம்பரியமிக்க இல்கல் கைத்தறி சேலையை அணிந்திருந்தார்.

புகழ்பெற்ற இல்கல் சேலைகள் கர்நாடகா மாநிலம் பாகல்கோட் மாவட்டத்தில் உள்ள இல்கல் நகரில் கைத்தறி நெசவாளர்களால் தயாரிக்கப்படுகின்றன. கர்நாடகாவில் இல்கல் புடவைகள் மிகவும் பிரபலமானவை.

அதேபோல் நிதியமைச்சரின் இல்கல் புடவையில் புகழ்பெற்ற பாரம்பரிய தார்வாட் எம்பிராய்டரி செய்யப்பட்டிருந்தது. தார்வாட் நகரின் நாராயண்பூரில் 32 ஆண்டுகளாக எம்பிராய்டரி துறையில் ஈடுபட்டு வரும் ஆர்த்தி கிராஃப்ட்ஸ் என்ற சுயதொழில் நிறுவனத்தைச் சேர்ந்த பெண்களால் பிரத்யேகமாக எம்ப்ராய்டரி செய்யப்பட்டுள்ளது.

கர்நாடக எம்பியும், மத்திய அமைச்சருமான பிரலாத் ஜோஷி இந்த புடவையின் பாரம்பரியம் மற்றும் சிறப்புகளை எடுத்துரைத்து, இதனை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு பரிசளித்தார்.

இந்த புடவை குறித்து ஆர்த்தி கிராஃப்ட்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர் ஆர்த்தி கூறும்போது, "நிதியமைச்சர் அணிந்திருந்தது பாரம்பரிய தார்வாட் எம்பிராய்டரி கொண்ட கைத்தறி இல்கல் புடவைகள். ஐந்தரை மீட்டர் நீளம் கொண்ட அந்த புடவையில் தேர், கோபுரம், மயில், தாமரை போன்ற உருவங்கள் எம்ப்ராய்டரி செய்யப்பட்டுள்ளன.

கைத்தறி மற்றும் சுயதொழில் செய்யும் பெண்களை ஊக்குவிக்கும் வகையில், அமைச்சர் இந்த புடவையை அணிந்து கொண்டது எங்களுக்கு பெருமையையும், மகிழ்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

எங்களது புடவை அணிந்தபடி அமைச்சர் பட்ஜெட் தாக்கல் செய்தது எங்களது மாவட்டம் மற்றும் கர்நாடகாவுக்கு பெருமை. இந்த பாரம்பரிய புடவையை அணிந்ததற்காக மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு நன்றி" என்றார்.

இதையும் படிங்க:பழங்குடி மக்களின் மேம்பாட்டுக்கு அதிக நிதி ஒதுக்கீடு : தேர்தல்களை குறிவைக்கும் பாஜக அரசு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.