ETV Bharat / bharat

புதுச்சேரி மத்திய சிறையில் இயற்கை விவசாயம் - கைதிகளின் ஒரு நாள் சம்பளம் எவ்வளவு? - புதுச்சேரி மத்திய சிறையில் இயற்கை விவசாயம்

புதுச்சேரி மத்திய சிறையில் இயற்கை விவசாயத்தின் மூலம் கைதிகள் விளைவித்த பூக்கள், பழம், மூலிகை காய்கறிகள் மற்றும் விவசாய பொருள்களை அறுவடை செய்யும் நிகழ்ச்சி நடைபெற்றது.

புதுச்சேரி மத்திய சிறையில் இயற்கை விவசாயம்

author img

By

Published : May 16, 2022, 6:12 PM IST

புதுச்சேரி காலாப்பட்டில் மத்திய சிறைச்சாலை உள்ளது. சிறையில் விசாரணை கைதிகள், தண்டனை கைதிகள் என 200க்கும் மேற்பட்ட கைதிகள் உள்ளனர். மத்திய சிறைச்சாலையில் உள்ள கைதிகளின் மனநிலையில் மாற்றத்தை ஏற்படுத்த சிறை துறை பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துவருகிறது.

அதன்படி கைதிகளுக்கு யோகா, தியான வகுப்பு, ஒவியம் சிற்பம் உள்ளிட்ட நுண்கலை பயிற்சியும் கற்பிக்கப்படுகிறது. உடல் நலனை பாதுகாக்க பயிற்சியாளர்கள் மூலம் விளையாட்டு பயிற்சியும், நடன பயிற்சியும் அளிக்கப்படுகிறது.

சிறைசாலை வளாகம் அமைந்துள்ள 36 ஏக்கரில் 3 ஏக்கர் நிலப்பரப்பு கைதிகளால் சமன்படுத்தப்பட்டு துல்லிய பண்ணை மற்றும் இயற்கை விவசாய பண்ணை அமைக்கப்பட்டுள்ளது. நாட்டின் பல்வேறு பகுதியில் இருந்து கொண்டு வரப்பட்ட 60 வகையான பழம், மூலிகை, காய்கறி என 50 ஆயிரம் செடிகள் நடப்பட்டுள்ளன.

இது மட்டுமன்றி உரம், பூச்சிக் கொல்லிகள் தயாரிக்க சிறை வளாகத்தில் மாடு, ஆடு மற்றும் முயல் வளர்க்கப்படுகிறது. இவற்றை முறையாக கைதிகளே பராமரிக்கின்றனர். கைதிகள் பயிரிட்ட செடிகளில் பூக்கள் பூத்தும், காய்கறிகள் விளைந்தும் உள்ளது.இதனை அறுவடை செய்யும் விழா சிறையில் நடந்தது.

சிறைத்துறை செயலர் நெடுஞ்செழியன், தேசிய பாதுகாப்பு குழு உறுப்பினர் வித்யா ராம்குமார், சிறை அலுவலர் சாமி வெற்றிசெல்வன் ஆகியோர் அறுவடையை தொடங்கி வைத்தனர். கத்திரிக்காய், மாங்காய், எலும்மிச்சை, பப்பாளி, கீரைகள், முள்ளங்கி, பலா, வெண்டை ஆகிய காய்கறிகளோடு மஞ்சள் சாமந்தி பூக்களும் அறுவடை செய்யப்பட்டது.

காய்கறிகளை கைதிகளின் உணவு தயாரிப்புக்கு பயன்படுத்த திட்டமிட்டுள்ளனர். சிறையில் வேலை செய்யும் கைதிகளுக்கு நாள் ஒன்றுக்கு ரூ.25 சம்பளம், இன்று விவசாயத்தால் நாள் ஒன்றுக்கு ரூ.200 சம்பளம் வழங்கப்படுகிறது.

இதையும் படிங்க: நூல் விலை கடும் உயர்வு: பின்னலாடை உற்பத்தியாளர்கள் வேலை நிறுத்தம்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.