ஹைதராபாத்: பிரபல ஈ-காமர்ஸ் நிறுவனமான பிளிப்கார்ட் பண்டிகை கால விற்பனையாக கடந்த வாரம், தி பிக் பில்லியன் டேஸ் அறிவிப்பை வெளியிட்டது. இதில் கடந்த ஏழு நாட்களில் ஏறத்தாழ 140 கோடி வாடிக்கையாளர் தளத்தை பார்வையிட்டு உள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
பண்டிகையை காலங்களில் பிளிப்கார்ட், ‘தி பிக் பில்லியன் டேஸ்’ ஷாப்பிங் திருவிழா அறிவிப்பது வழக்கம். அந்த வகையில், பிளிப்கார்ட் வாடிக்கையாளர்களுக்கு 2023 ஆம் ஆண்டுக்கான ’தி பிக் பில்லியன் டேஸ்’ ஷாப்பிங் திருவிழா தள்ளுபடியை அக்டோபர் 8 முதல் 15 ஆம் தேதி வழங்கியது. இந்த தள்ளுபடி மூலமாக வாடிக்கையாளர்கள் வாங்க விரும்பும் பொருள்களை குறைந்த விலையில் வாங்கலாம்.
இந்நிலையில், பிளிப்கார்ட்டின், ‘தி பிக் பில்லியன் டேஸ்’ ஷாப்பிங் திருவிழாவின் தள்ளுபடி முடிந்த நிலையில், தள்ளுபடி நடந்த ஏழு நாட்களில், 140 கோடி வாடிக்கையாளர்கள் தளத்தை பார்வையிட்டு உள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க: தமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு வாடகை ஆட்டோ, கால் டாக்ஸி, மேக்ஸி கேப் ஓடாது.. பின்னணி என்ன?
அதனைத் தொடர்ந்து, இந்தியா மட்டுமின்றி அந்தமான், ஹயுலியாங் (அருணாச்சலப் பிரதேசம்), சோக்லாம்சர் (லடாக்), கட்ச் (குஜராத்) மற்றும் லோங்கேவாலா (ராஜஸ்தான்) போன்ற பகுதிகளுக்கும் டெலிவரி செய்வதாக நிறுவனம் கூறி இருந்தது. பிளிப்கார்டின் கடந்த வருட ‘தி பிக் பில்லியன் டேஸ்ஸின்’ ஷாப்பிங் திருவிழாவுடன் ஒப்பிடுகையில், இந்த வருடம் பெண்கள் அதிகளவில் ஆர்டர் செய்து பொருட்கள் வாங்கி உள்ளதாக நிறுவனம் தரப்பில் கூறப்பட்டு உள்ளது.
பிளிப்கார்ட்டின் கிரானா திட்டத்தின் மூலம், தி பிக் பில்லியன் டேஸ்ஸின் முதல் 4 நாட்களில் 40 லட்சத்திற்கும் மேலான பேக்கெஜ்களை வழங்கியதாக நிறுவனம் கூறியுள்ளது. மேலும், பண்டிகைக்கு முந்தைய காலத்துடன் ஒப்பிடுகையில் தி பிக் பில்லியன் நாட்களில், பொருள்கள் அதிகளவில் விற்பனையாவதால் 6 மடங்கு வளர்ச்சியை அடைந்து உள்ளதாக பிளிப்கார்ட் நிறுவனம் தெரிவித்து உள்ளது.
இந்நிலையில், தி பிக் பில்லியன் டேஸ் தொடங்கப்பட்டு 10 ஆண்டுகளில் 1 லட்சம் பணியாளர்களுக்கு வேலை வாய்ப்புகளை வழங்கி உள்ளதாவும், பிளிப்கார்டின் கிரானா திட்டத்தின் மூலம் தி பிக் பில்லியன் டேஸ்ஸின் ஆரம்ப நாட்களில், இந்த பணியாளர்கள் 40 லட்சத்திற்கும் அதிகமான டெலிவரிகள் செய்து உள்ளனர் என்றும் பிளிப்கார்ட் குழுமத்தின் தலைமை செயல் அதிகாரி கல்யாண் கிருஷ்ணமூர்த்தி தெரிவித்து உள்ளார்.
இதையும் படிங்க: சாய் கிரிப்டோ கன்சல்டன்சி பணமோசடி வழக்கில் திருப்பம்! பாஜக முக்கியப் புள்ளி கைது! என்ன காரணம்?