ETV Bharat / bharat

நவ்ஜோத் சிங் சித்து ராஜினாமா.. 5 காரணங்கள்! - அமரீந்தர் சிங்

காங்கிரஸ் மாநிலத் தலைவர் பதவியை நவ்ஜோத் சிங் ராஜினாமா செய்துள்ள நிலையில் அதற்கான 5 காரணங்கள் குறித்து பார்க்கலாம்.

Navjot Singh Sidhu
Navjot Singh Sidhu
author img

By

Published : Sep 28, 2021, 11:07 PM IST

சண்டிகர் : பஞ்சாப் முன்னாள் முதலமைச்சர் கேப்டன் அமரீந்தர் சிங், காங்கிரஸ் மாநிலத் தலைவர் நவ்ஜோத் சிங் சித்து இடையேயான பனிப்போர் நாடறிந்ததே.

இந்நிலையில் முதலமைச்சர் பதவியை கேப்டன் அமரீந்தர் சிங் துறந்தார். அதன்பின்னர் இருவர் இடையே ஒருவித அமைதி நிலவியது. மாநிலத்தின் முதலமைச்சராக சரண்ஜித் சிங் சன்னி நியமிக்கப்பட்டார். தொடர்ந்து நவ்ஜோத் சிங் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

இது தொடர்பாக காங்கிரஸ் இடைக்காலத் தலைவர் சோனியா காந்திக்கு அனுப்பியுள்ள ராஜினாமா கடிதத்தில், பஞ்சாப் எதிர்காலத்தில் சமரசம் செய்துகொள்ள மாட்டேன், மாநிலத் தலைவர் பதவியை ராஜினாமா செய்கிறேன். ஒரு தொண்டராக கட்சியில் நீடிப்பேன்” எனத் தெரிவித்திருந்தார்.

இது குறித்து ட்விட்டரில் பதிலளித்துள்ள கேப்டன் அமரீந்தர் சிங், “அவர் ஒரு நிலையான மனிதர் கிடையாது என்று நான் ஏற்கனவே கூறினேன். அவரால் பஞ்சாப் போன்ற எல்லை மாநிலத்தை நிர்வகிப்பது சாத்தியமல்ல” எனத் தெரிவித்துள்ளார்.

  • I told you so…he is not a stable man and not fit for the border state of punjab.

    — Capt.Amarinder Singh (@capt_amarinder) September 28, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

இது ஒரு புறம் இருந்தாலும் நவ்ஜோத் சிங்கின் ராஜினாமாவுக்கான 5 காரணங்கள் குறித்து பார்க்கலாம்.

1) முதலமைச்சர் பதவி ஏமாற்றம்

கேப்டன் அமரீந்தர் சிங்கின் பதவி விலகலுக்கு பிறகு தனக்கு முதலமைச்சர் பதவி கிடைக்கும் என்று நவ்ஜோத் சிங் நினைத்திருந்தார். ஆனால் சித்து முதலமைச்சராக வரமுடியாதபடி அமரீந்தர் சிங் காய்நகர்த்தினார். சித்து நாட்டுக்கும் பஞ்சாப்பிற்கும் அச்சுறுத்தல் என்று விமர்சித்தார். காங்கிரஸின் உயர்மட்ட தலைவர்களின் ஆதரவையும் சித்து பெறமுடியவில்லை.

2) சித்து கருத்து நிராகரிப்பு

பஞ்சாப் புதிய முதலமைச்சர் சரண்ஜித் சிங் சன்னி, தனது விருப்பத்தின்படியே நடப்பார் என்று சித்து எண்ணினார். ஆனால் அதுவும் நடைபெறவில்லை. காவல் உயர் அலுவலர்கள் நியமனம் என அனைத்திலும் சரண்ஜித் சிங் தனித்துவம் காட்டினார். இது சித்துவுக்கு பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியது.

3) மாநில அரசு தலைமை வழக்குரைஞர் நியமனத்தில் ஏமாற்றம்

நவ்ஜோத் சிங் சித்து மாநில அரசின் தலைமை வழக்குரைஞராக அன்மோல் ராட்டன் சித்து (Anmol Ratan Sidhu)-ஐ நியமிக்க வற்புறுத்தினார். ஆனால் சரண்ஜித் சிங் ஏபிஎஸ் தியோலை (APS Deol) தேர்ந்தெடுத்தார்.

4) அமைச்சர்கள் இலாகா ஒதுக்கீடு

முதலமைச்சர் சரண்ஜித் சிங் சன்னியின் அமைச்சரவையை உருவாக்க கட்சிக்கு ஒரு வார கடின உழைப்பு தேவைப்பட்டது. இங்கேயும் சித்து சன்னி மீது ஆதிக்கம் செலுத்த முயற்சித்தார். ஆனால் அமைச்சரவையில் கேப்டன் அமரீந்தர் சிங் ஆதரவாளர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டது. சித்துவின் கருத்து பரிசீலிக்கப்படவில்லை.

5) உள்துறை இலாகா

நவ்ஜோத் சிங் சித்து உள்துறை அமைச்சகம் தொடர்பாக தனது செல்வாக்கை காட்ட முயன்றார். சரண்ஜித் சிங் சன்னி, சுகிந்தர் சிங் ரந்தவாவுக்கு உள்துறை பொறுப்பை அளித்தார். ரந்தவா அமரீந்தர் சிங்குக்கு பிறகு முதலமைச்சர் ஆவார் என்று எதிர்பார்க்கப்பட்டவர் ஆவார்.

இதற்கிடையில், பஞ்சாப் முன்னாள் முதலமைச்சர் கேப்டன் அமரீந்தர் சிங், உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்திக்கவுள்ளார் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதையும் படிங்க : யூதாஸ் நாணயம், திப்பு கீரிடம், நபி அணையா விளக்கு- அத்தனையும் பொய்யா கோபால்?

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.