ETV Bharat / bharat

லாரி மோதி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் பலி - Jodhpur pickup van accident

ராஜஸ்தான் மாநிலத்தில் பிக்கப் வேன் மீது லாரி மோதியதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

லாரி மோதி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் பலி

author img

By

Published : Mar 31, 2023, 9:25 PM IST

ஜோத்பூர்: ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் இன்று (மார்ச் 31) பிற்பகல் நடந்த சாலை விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் உயிரிழந்தனர். இந்த விபத்து ஜோத்பூரின் பலோடி என்னும் பகுதியில் நடந்துள்ளது. மேலும், 2 பேர் பலத்த காயங்கள் உடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதுகுறித்து ஜோத்பூர் போலீசார் கூறுகையில், "ஜம்பா என்னும் கிராமத்தில் வசித்து வந்த ஒரே குடும்பத்தை சேர்ந்த ஏழு பேர் தங்களது குடும்ப திருமணத்துக்காக துணிமணி, நகைகள் உள்ளிட்டவை வாங்க பலோடி பகுதிக்கு பிக்கப் வேனில் வந்துள்ளனர். இதையடுத்து மீண்டும் கிராமத்துக்கு திரும்ப பிகானேர் சாலை வழியாக புறப்பட்டனர்.

இதனிடையே எதிரே வந்த கெமிக்கல் டேங்கர் லாரி, பிக்கப் வேன் மீது மோதியது. இதில், பிக்கப் வேன் ஓட்டுநர் உட்பட 5 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 2 பேர் படுகாயமடைந்தனர். இதுகுறித்து தகவலறிந்து சம்பவயிடத்துக்கு விரைந்து உடல்களை மீட்டு ஜோத்பூர் அரசு மருத்துவனைக்கு அனுப்பி வைத்தோம். படுகாயமடைந்தவர்களை சிகிச்சைக்காக சேர்த்துள்ளோம்.

முதல்கட்ட தகலில் உயிரிழந்தவர்கள் ஓட்டுநர் பர்வத் (25), விகாஸ் (20), பிரவீன் (12), ரவீனா (10). ஊர்மிளா (38) என்பது தெரியவந்துள்ளது. அதேபோல படுகாயமடைந்தவர்கள் அர்பிதா மற்றும் இஷானி என்பதும் தெரியவந்துள்ளது. இவர்கள் பலோடி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். அதன்பின் இஷானியின் உடல்நிலை மோசமானதால், ஜோத்பூர் மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டார். லாரி ஓட்டுநரை கைது செய்துள்ளோம்" எனத் தெரிவித்தனர்.

இதையும் படிங்க: கோயில் கிணற்றில் விழுந்து 35 பேர் பலி - ஸ்ரீராம நவமியில் அரங்கேறிய சோகம்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.