ETV Bharat / bharat

சுதந்திர இந்தியாவின் முதல் வாக்காளர் சரண் நெகி காலமானார்

இந்தியா சுதந்திரம் அடைந்த பின்னர் முதலாவதாக வாக்களித்த பெருமை உடைய வாக்காளர் ஷ்யாம் சரண் நெகி உடல் நலக் குறைவால் இன்று (நவ-5) காலமானார்.

Etv Bharatசுதந்திர இந்தியாவின் முதல் வாக்காளர் சரண் நெகி  காலமானார்

author img

By

Published : Nov 5, 2022, 4:04 PM IST

சிம்லா: இமாச்சலப் பிரதேசத்தை சேர்ந்த நாட்டின் முதல் வாக்காளரும், 105 வயதை கடந்தவருமான ஷ்யாம் சரண் நெகி 1951 ஆம் ஆண்டு அக்டோபர் 25 அன்று நடந்த தேர்தலில் முதன் முதலில் வாக்களித்தார். மேலும் இறுதியாக இந்த ஆண்டு நடக்க இருந்த ஹிமாச்சல பிரதேச சட்டமன்ற தேர்தலுக்கான தபால் வாக்கை நவம்பர் 2 ஆம் தேதி செலுத்தியிருந்தார். இந்நிலையில் இமாச்சலப் பிரதேசத்தின் கல்பாவில் உள்ள அவரது வீட்டில் இன்று (நவ-5) உடல்நலக் குறைவால் உயிரிழந்தார்.

சரண் நெகி 1917 ஆம் ஆண்டு ஜூலை 1 ஆம் தேதி பிறந்தார். இந்தியா சுதந்திரம் அடைந்த பின் நாட்டில் முதல் பொதுத் தேர்தல் 1952 ஆம் ஆண்டு நடத்தப்பட்டன. இருப்பினும் இமாச்சலப் பிரதேசத்தின் பனிப்பொழிவு காரணமாக முன்னதாகவே 1951 ஆம் ஆண்டு அக்டோபர் 25 இல் நடத்தப்பட்டது. அப்போது நடத்தப்பட்ட மக்களவைத் தேர்தல், சட்டமன்ற தேர்தல் மற்றும் பஞ்சாயத்து தேர்தல் என அனைத்து தேர்தல்களிலும் சரண் நெகி வாக்களித்தார்.

பின்னர் இந்திய தேர்தல் ஆணையம் நாட்டின் முதல் வாக்களார் நெகி என்பதை அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. இதனைத் தொடர்ந்து நடந்த தேர்தலில் மிகவும் உற்சாகமாக வாக்களித்தார். இறுதி வாக்கை நவ-2 இல் தபால் வாக்காக செலுத்திய நிலையில் இன்று மரணம் அடைந்தார்.

இதையும் படிங்க:ஆர்டிஐ மனுவிற்கு 8500 பக்கத்தில் பதில் - மாட்டு வண்டி கட்டி எடுத்துச்சென்ற ஆர்வலர்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.