ஸ்ரீநகர்: ஜம்மு-காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு நீக்கப்பட்ட பின்பு, அங்கு இணையசேவைகள் முடக்கப்பட்டன.
சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்ட நாளில் இருந்து பல்வேறு முறை இணையசேவை முடக்கப்பட்டதோடு, பல்வேறு கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டிருந்தன.
இந்தச்சூழ்நிலையில், மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு முதல்முறையாக சுதந்திரதினத்தன்று தடையற்ற இணையசேவை காஷ்மீர் பள்ளத்தாக்கில் கிடைப்பது இதுவே முதல் முறை என காஷ்மீரின் காவல் ஐஜி விஜயகுமார் கூறியுள்ளார்.
பதற்றமான பகுதிகளில் ட்ரோன் மூலம் கண்காணிப்பு
இதனை மேற்கொள்காட்டி ட்வீட் செய்துள்ள காஷ்மீர் மண்டல காவல்துறை, பதற்றமான பகுதிகளில் ட்ரோன் மூலம் கண்காணிக்கப்பட்டுவருவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்நிலையில், காஷ்மீர் பள்ளத்தாக்குப் பகுதிகளில் 2003ஆம் ஆண்டுக்குப் பிறகு முதல்முறையாக இணையசேவை முழு வேகத்துடன் செயல்படுவதாக நெட்டிசன்கள் கருத்து தெரிவித்துவருகின்றனர்.
இதையும் படிங்க: சுதந்திர தினம் - வங்கதேச எல்லையில் இனிப்பு வழங்கி கொண்டாட்டம்