ETV Bharat / bharat

காற்று மாசுபாட்டின் உச்சத்தில் டெல்லி - Diwali 2022

டெல்லியில் தடையை மீறி பட்டாசு வெடித்ததால், காற்றின் மாசுபாட்டு அளவு புதிய உச்சத்தை தொட்டுள்ளது.

தடையை மீறி தீபாவளி கொண்டாட்டம்.. காற்று மாசுபாட்டின் உச்சத்தில் டெல்லி

author img

By

Published : Oct 25, 2022, 9:04 AM IST

டெல்லி சுற்றுச்சூழல் அமைச்சர் கோபால் ராய், “தீபாவளி அன்று பட்டாசு வெடித்தால் 6 மாத சிறை தண்டனையும், ரூ.200 அபராதமும் விதிக்கப்படும்” என்று அறிவித்திருந்தார். அதேபோல் டெல்லியில் பட்டாசு உற்பத்தி, சேமிப்பு மற்றும் விற்பனை செய்பவர்களுக்கு ரூ.5,000 வரை அபராதமும், வெடிபொருள் சட்டத்தின் 9 ‘பி’ பிரிவின் கீழ் 3 ஆண்டுகள் சிறைத்தண்டனையும் விதிக்கப்படும் என்றும் தெரிவித்திருந்தார்.

இந்த தடையை அமல்படுத்த டெல்லி காவல்துறை சார்பில் உதவி காவல் ஆணையரின் கீழ் 210 குழுக்கள், வருவாய்த்துறையின் கீழ் 165 குழுக்கள் மற்றும் டெல்லி மாசு கட்டுப்பாட்டு குழு சார்பில் 33 குழுக்கள் என மொத்தம் 408 குழுக்கள் அமைக்கப்பட்டன.

டெல்லியில் தடையை மீறி பட்டாசு வெடிப்பு
டெல்லியில் தடையை மீறி பட்டாசு வெடிப்பு

இந்த குழுக்களில் உள்ள அலுவலர்கள் நேற்று (அக் 24) தீபாவளி தினத்தன்று, தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். இருப்பினும் நேற்று மாலை 6 மணி முதல் தெற்கு மற்றும் வடமேற்கு டெல்லியில் வசிப்பவர்களில் பெரும்பாலானோர் பட்டாசுகளை வெடித்தனர்.

குறிப்பாக தெற்கு டெல்லியின் கிழக்கு கைலாஷ், நேரு பிளேஸ், மூல்சந்த், கிழக்கு டெல்லியில் உள்ள லக்‌ஷ்மி நகர், மயூர் விஷார், ஷஹ்தரா மற்றும் தென்மேற்கு டெல்லியின் முனிர்கா ஆகிய பகுதிகளில் வசிக்கும் மக்களில் பெரும்பாலானோர் பட்டாசு வெடிப்பில் ஈடுபட்டனர்.

அதன் காரணமாக கடந்த 24 மணி நேரத்தில், காற்று தரக் குறியீடு (AQI) 312 புள்ளிகளாக உச்சம் அடைந்துள்ளது. இது 2018 தீபாவளி அன்று பதிவாகிய 281 புள்ளிகளைக் காட்டிலும் அதிகரித்துள்ளது. தற்போது டெல்லியில் இருக்கக்கூடிய சூழலில், காற்றின் மாசுபாட்டு அளவு அதிகரித்திருப்பது மோசமான ஒன்று என்று சுற்றுச்சூழல் ஆய்வாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். அதேநேரம் டெல்லியில் காற்றின் தரத்தை நன்கு அறிந்திருந்தும், இதுபோன்ற செயல்களில் மக்கள் ஈடுபடுவது வருத்தமாக இருப்பதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். நகரின் காஜியாபாத் (301), நொய்டா (303), கிரேட்டர் நொய்டா (270), குருகிராம் (325) மற்றும் ஃபரிதாபாத் (265) என்ற புள்ளிகளுடன் மாசடைந்து காணப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: கழுகுப்பார்வையில் சென்னையின் தீபாவளி கொண்டாட்டம்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.