பெங்களூரு : கர்நாடக மாநிலம் அனெகல் பகுதியில் உள்ள பட்டாசு கடையில் ஏற்பட்ட தீ விபத்தில் 11 பேர் உடல் கருகி உயிரிழந்தனர். தமிழகம் - கர்நாடக எல்லையான பெங்களூரு - ஒசூர் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள அத்திபெல்லி எல்லை பகுதியில் பாலாஜி கிராக்கர்ஸ் என்ற பட்டாசு கடை இயங்கி வந்தது.
நவீன் என்பவருக்கு சொந்தமான இந்த கடையில் 20க்கும் மேற்பட்ட பணியாளர்கள் வேலை பார்த்து வந்து உள்ளனர். இந்நிலையில், இன்று (அக். 7) மாலை அந்த கடையில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ விபத்தில் கடையில் பணியாற்றிய 11 பேர் உடல் கருகி உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
மொத்தம் 16 ஊழியர்கள் கடையினுள் சிக்கிக் கொண்ட நிலையில், 4 பேர் மட்டும் தப்பியதாக தகவல் கூறப்படுகிறது. உயிரிழந்தவர்களில் 3 பேர் தமிழகத்தை சேர்ந்தவர்கள் என தகவல் கூறப்படுகிறது. 11 ஊழியர்கள் உயிரிழந்தது உறுதி செய்யப்பட்டு உள்ள நிலையில் மீதமுள்ள 5 பணியாளர்களின் நிலை குறித்து தீயணைப்பு வீரர்கள் மற்றும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கடையில் புதிதாக லோடு இறக்கும் போது இந்த தீ விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது. தீயை அணைக்கும் பணியில் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் பட்டாசு கடையில் பற்றிய தீ அருகில் இருந்த மற்ற கடைகள் மற்றும் வாகனங்களுக்கு பரவி தீக்கிரையாக்கியது.
இதையும் படிங்க : அதிரடி ஆஃபர்களுக்கு நடுவே பதறவைக்கும் மோசடிகள்.. பண்டிகை பர்சேஸில் கவனம் தேவை..!