ETV Bharat / bharat

உரத் தொழிற்சாலையில் திடீர் தீ விபத்து

author img

By

Published : Sep 17, 2021, 7:36 PM IST

ஹைதராபாத்திலுள்ள உரத் தொழிற்சாலையில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது.

தீ விபத்து
தீ விபத்து

தெலங்கானா: ரங்கா ரெட்டி மாவட்டம் அம்பர்பேட்டையில் இயங்கிவரும் SWAL கார்ப்பரேஷன் லிமிடெட் என்னும் உரத் தொழிற்சாலையில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது.

இது குறித்து தகவலறிந்த தீயணைப்புத் துறையினர், சம்பவ இடத்திற்கு வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். தீ விபத்து காரணமாகத் தொழிற்சாலைக்குள் செல்ல வழி இல்லாததால், உள்ளூர் மக்களுடன் சேர்ந்து சுவர்களை இடித்து தீயணைப்புத் துறையினர் தீயை அணைக்க முயற்சி செய்தனர்.

நீண்ட நேரப் போரட்டத்திற்குப் பிறகு தீயை அணைத்தனர். பின்னர் இது குறித்து காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து, விபத்திற்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

இதையும் படிங்க: 2020இல் சாதி, மத மோதல் இரு மடங்கு அதிகரிப்பு - என்.சி.ஆர்.பி. தகவல்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.