புதுச்சேரியில் தீபாவளியை முன்னிட்டு பட்டாசு கடைகளை வைப்பதற்கு உரிமம் கோரப்பட்டது. அதற்கு மாவட்ட நிர்வாகம் சார்பில் விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன. இந்த நிலையில், தீபாவளிக்கு ஒரு வாரம் இருக்கும் நிலையில் பட்டாசு உரிமம் வழங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. புதுச்சேரியில் நகரப் பகுதியில் பட்டாசு கடைகளை வைப்பதற்கு புதுச்சேரி தீயணைப்புத்துறை அனுமதி வழங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.
தற்போது விண்ணப்பித்துள்ள புதுச்சேரி நகரப்பகுதியில் 60 மொத்த வியாபார கடைகளில் எந்த ஒரு பாதுகாப்பு வசதிகளும் உரிய இடமும் இல்லை என்றும்;மேலும் எந்த ஒரு அசம்பாவிதங்கள் நடைபெற்றாலும் அதற்கு கடை உரிமையாளர்கள் பொறுப்பேற்க வேண்டும் என்றும்; இதுசம்பந்தமாக அவர்களிடம் இருந்து ஒரு விண்ணப்பித்தை கொடுத்து பூர்த்தி செய்ய கூறியுள்ளனர்.
அதில் இந்த ஆண்டு வைக்கும் கடைகள் அடுத்த ஆண்டிற்கு இந்த இடத்தில் வைக்கக்கூடாது என ஒப்புக் கொண்டால், இந்த ஆண்டிற்கான கடை உரிமம் தரப்படும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதனைக்கண்டித்து பட்டாசு கடை உரிமையாளர்கள் தற்போது தீயணைப்பு நிலையத்தில் முற்றுகையிட்டு பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதையும் படிங்க:தண்ணீர் வாளியில் மூழ்கி ஒன்றரை வயது குழந்தை பலி