மும்பை: இந்திய கடற்படையில் விக்கிரமாதித்யா என்ற விமானம் தாங்கி போர் கப்பலில் பணியாளர்கள் பணியில் ஈடுப்பட்டிருந்தனர். இந்நிலையில், நேற்று (மே 8) கப்பல் திடீரென தீ பிடித்து எரிந்தது.
இதுகுறித்து கப்பற்படை தலைமைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனடியாக சம்பவ இடத்திற்கு தீயணைக்கும் கப்பல்கள் அனுப்பப்பட்டு, நிலைமை கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.
தீ விபத்து ஏற்பட்டதற்கான காரணம் குறித்து அலுவலர்கள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: தமிழ்நாட்டில் மே.10 முதல் முழு ஊரடங்கு