ETV Bharat / bharat

உ.பி. காசியாபாத் பகுதியில் உள்ள குடிசைப்பகுதிகளில் பெரும் தீ விபத்து - national news in tamil

உத்தரப்பிரதேசம் மாநிலம் காசியாபாத் பகுதியில் உள்ள குடிசைப் பகுதியில் நேற்று பெரும் தீ விபத்து ஏற்பட்டது.

Ghaziabad  Slum area burning
உ.பி. காஜிபாத் பகுதியில் உள்ள குடிசைப்பகுதிகளில் பெரும் தீ விபத்து
author img

By

Published : Nov 4, 2020, 4:01 PM IST

லக்னோ: உத்தரப் பிரதேச மாநிலம், காசியாபாத்தின் கிருஷ்ணா விஹாரில் உள்ள குடிசைப் பகுதிகளில் நேற்று பெரும் தீ விபத்து ஏற்பட்டது. இதில், பல குடிசைகள் எரிந்திருந்தாலும் யாரும் உயிரிழக்கவில்லை.

இந்த தீவிபத்து தொடர்பான தகவல் கிடைத்ததும், 10 தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்திற்குச் சென்று தீயை அணைக்கும் பணியை மேற்கொண்டன. நேற்று இரவு 10 மணியளவில் காவல் துறையினருக்குத் தகவல் கிடைத்ததைத் தொடர்ந்து காவல் துறையினரும் சம்பவ இடத்திற்குச் சென்று தேவையான நடவடிக்கைகளை எடுக்கத் தொடங்கினர்.

இந்த விபத்தால், பீதியடைந்த மக்களைக் கையாளுவது மிகவும் சிரமமாக இருந்ததாக காவல் துறையினர் தகவல் தெரிவித்தனர்.

இந்தத் தீ விபத்தால் அப்பகுதியே புகைமண்டலமாக காட்சியளித்தது. டெல்லி நகரிலிருந்து சில கிலோமீட்டர் தொலையில் இப்பகுதி அமைந்துள்ளதால் நகரின் சில பகுதிகளில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இதையும் படிங்க: டெல்லியில் தொடர்ந்து மோசமடையும் காற்று மாசு

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.