காசியாபாத்: பாஜக தொண்டர்களின் வாகனங்களை சேதப்படுத்தியதாக 200 விவசாயிகள் மீது காசியாபாத் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
இது குறித்து நகர காவல் கண்காணிப்பாளர் ஞானேந்திர சிங், “டிரான்ஸ் ஹிந்தன் பகுதியின் (சாஹிபாபாத்) கசாம்பி காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது” என்றார்.
டெல்லி-மீரட் அதிவேக நெடுஞ்சாலையில் ஆளும் கட்சித் தொண்டர்கள் ஊர்வலம் மேற்கொண்டிருந்தபோது, பி.கே.யு விவசாயிகள் அமைப்பைச் சேர்ந்தவர்களிடம் பிரச்சினை ஏற்பட்டது. கைகலப்பில் முடிந்த இந்த விவகாரம் தொடர்பாக இரு தரப்பிலிருந்து காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இச்சூழலில், 200 விவசாயிகள் மீதும் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.