டெல்லி: நாடாளுமன்றத்தில் மத்திய பட்ஜெட்டை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். 2024ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில், பிரதமர் மோடி தலைமையிலான பாஜக அரசில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்த முழு பட்ஜெட் இதுவாகும்.
அடுத்தாண்டு பொதுத் தேர்தல் நடைபெறுவதால் இடைக்கால பட்ஜெட் மட்டுமே தாக்கல் செய்ய முடியும். நடுத்தர மக்கள் எதிர்பார்த்தது போல மத்திய பட்ஜெட்டில் பல்வேறு கவர்ச்சிகர அறிவுப்புகளை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் வெளியிட்டார்.
நாடு முழுவதும் 157 நர்சிங் கல்லூரிகள் புதிதாக தொடங்கப்படும் என மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் வெளியிட்டார். மேலும் 2015ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட மருத்துவ கல்லூரிகளுக்கு அருகே அறிவிக்கப்பட்ட 157 நர்சிங் கல்லூரிகள் தொடங்கப்படும் என்றும் இதன் மூலம் பவ்வேறு நிர்வாக சிக்கல்களை தவிர்க்க முடடியும் என்றும் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட் உரையில் தெரிவித்துள்ளார்.
நாட்டில் தனி நபர் வருமானம் அதிகரித்து உள்ளதாக கூறிய மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், சராசரியாக ஒரு லட்சத்து 97 ஆயிரம் ரூபாயாக அதிகரித்து உள்ளதாக தெரிவித்தார். மேலும் உலக பொருளாதரத்தில் 10 வது இடத்தில் இருந்த இந்தியா தற்போது 5வது இடத்திற்கு முன்னேறி இருப்பதாக தெரிவித்தார்.
2023-24 நிதி ஆண்டிற்கான மத்திய ரயில்வே துறைக்கு மூலதனச் செலவாக 2 லட்சத்து 40 ஆயிரம் கோடி ரூபாயை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார். இளைஞர்களுக்கான சர்வதேச வாய்ப்புகளை உறுதி செய்ய, பல்வேறு மாநிலங்களில்
சர்வதேச வாய்ப்புகளைப் இளைஞர்கள் பெறத் தேவைஒயான திறமைகளை வழங்க, பல்வேறு மாநிலங்களில் மத்திய அரசு தரப்பில்30 ஸ்கில் இந்தியா சர்வதேச மையங்கள் எனப்படும் திறன் மேம்ம்பாட்டு பயிற்சி மையங்கள் அமைக்கப்படும் என நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
பொருளாதார ரீதியாக நலிவடைந்த மக்களுக்கு வீடு கட்ட நிதி வழங்கும் பிரத மந்திரி ஆவாஸ் யோஜா திட்டத்தை கடந்த 2015ஆம் ஆண்டு மத்திய அரசு தொடங்கியது. இந்நிலையில் 2023-24 மத்திய பட்ஜெட்டில் பிரதம மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்திற்கான செலவு 66 சதவீதம் அதிகரித்து 79 ஆயிரம் கோடி ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளதாக மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.
இதையும் படிங்க: Budget 2023 Live Updates: பொருளாதாரத்தில் 5வது இடத்திற்கு முன்னேற்றம்