ETV Bharat / bharat

புல்வாமா தாக்குதல்: ஜவான்களுக்கு பாலிவுட் பிரபலங்கள் அஞ்சலி! - homage to Pulwama martyrs

புல்வாமா தாக்குதலின் இரண்டாம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு வீர மரணம் அடைந்த ஜவான்களுக்கு பாலிவுட் பிரபலங்கள் அஞ்சலி செலுத்தினர்.

Pulwama martyrs
Pulwama martyrs
author img

By

Published : Feb 14, 2021, 5:37 PM IST

ஜம்மு - காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில், கடந்த 2019ஆம் ஆண்டு பிப்ரவரி 14ஆம் தேதி, பாதுகாப்புப் படையினர் சென்ற வாகனங்கள் மீது தற்கொலை தாக்குதல் நடத்தப்பட்டது. இந்தத் தாக்குதலில் 40 பாதுகாப்புப் படையினர் உயிரிழந்தது நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது.

இந்நிலையில், புல்வாமா தாக்குதலின் இரண்டாம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு, வீர மரணம் அடைந்த ஜவான்களுக்கு அக்ஷய் குமார், வருண் தவான், ராஜ்குமார் ராவ் உள்ளிட்ட பல பாலிவுட் நடிகர்கள் சமூகவலைதளங்களில் அஞ்சலி செலுத்தினர்.

இதுகுறித்து ட்வீட் செய்த பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார், " #PulwamaAttack வீரர்களின் துணிச்சலை எப்போதும் மறக்க மாட்டோம். உங்களின் உயர்ந்த தியாகங்களுக்கு நாங்கள் கடன்பட்டிருப்போம்" எனக் குறிப்பிட்டிருந்தார்.

மேலும், நடிகர் கார்த்திக் ஆர்யன் கூறுகையில், " இந்நாளில், இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, 40 வீரர்கள் புல்வாமா தாக்குதலில் நம் தேசத்திற்காக உயிர்த் தியாகம் செய்தனர். நாங்கள் எப்போதும் உங்களுக்குக் கடன்பட்டிருக்கிறோம்" என்றார்.

  • #PulwamaAttack के शहीदों को नमन🙏 On this day, 2 years back 40 soldiers sacrificed their lives for our nation in Pulwama attack. Prayers for the brave souls and their families. We'll always be in debt of yours 🇮🇳🙏 pic.twitter.com/wU0NDDmkTN

    — Kartik Aaryan (@TheAaryanKartik) February 14, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.