பிரான்ஸ் நாட்டிலிருந்து ஐந்தாவது தவணையாக 4 ரஃபேல் போர் விமானங்கள் இந்தியாவுக்கு வந்தடைந்துள்ளன. இந்த விமானங்களை இந்திய விமானப் படை தளபதி ஆா்.கே.எஸ்.பதெளரியா, பிரான்ஸின் மெரிக்னேக் - போர்டியாக்ஸ் விமானப் படைத் தளத்தில் கொடியசைத்து இந்தியாவுக்கு அனுப்பி வைத்தார்.
சுமார் 8 ஆயிரம் கிமீ தொடர்ச்சியாகப் பயணித்து வந்த விமானங்களுக்கு, நடு வானிலேயே பிரான்ஸ் விமானப்படை, ஐக்கிய அரபு அமீரகம் சார்பில் எரிபொருள் நிரப்பப்பட்டுள்ளது. கரோனா அச்சுறுத்தலுக்கு இடையே குறித்த நேரத்தில் இந்தியாவிடம் விமானங்களை ஒப்படைத்து வருவதற்கும், விமானிகளுக்குப் பயிற்சியை அளித்து வருவதற்கும் பிரான்ஸ் நிறுவனத்துக்கும், பிரான்ஸ் விமானப் படைக்கும் நன்றி என்று இந்தியத் தூதரகம் சார்பில் தெரிவித்துள்ளது.
தற்போது, இந்தியாவிடம் இருக்கும் அதிநவீன ரஃபேல் போா் விமானங்களின் எண்ணிக்கை 18ஆக அதிகரித்துள்ளது.
கடந்த 2016ஆம் ஆண்டு, பிரான்ஸ் நாட்டின் டஸ்ஸால்ட் ஏவியேஷன் நிறுவனத்திடமிருந்து 36 அதிநவீன ரஃபேல் போா் விமானங்களை வாங்க இந்தியா ரூ.59 ஆயிரம் கோடிக்கு ஒப்பந்தம் செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: 7 நாள்களில் 1202 பேர் கரோனாவால் மரணம்: டெல்லியின் நிலை என்ன?