திருச்சூர்: உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் அர்ஜென்டினா அணி சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளது. இதனை கொண்டாடும் விதமாக கேரளாவின் பல்வேறு பகுதிகளில் அர்ஜென்டினா ரசிகர்கள் பொதுமக்களுக்கு இலவச பிரியாணி, அல்வா, மீன் வகைகளை வழங்கி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
திருச்சூரைச்ச் சேர்ந்த ஒரு உணவக உரிமையாளர் 1,500 பேருக்கு அசைவ விருந்து அளித்தார். இந்த உணவக வழங்கும் விழாவை நேற்று (டிசம்பர் 19) காங்கிரஸ் சட்டப்பேரவை உறுப்பினர் சஃபி பரம்பில் தொடங்கிவைத்தார். அதேபோல பொதுமக்களுக்கு இலவச மீன் வகை உணவுகளை மீன்கடைக்காரர் மக்களுக்கு வழங்கினார். அதேபோல கோழிக்கோடைச் சேர்ந்த அல்வா வியாபாரி ஒருவர் பொதுமக்களுக்கு 100 கிலோ அளவில் அல்வா வழங்கி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.
மலப்புரத்தைச் சேர்ந்த ஒரு பள்ளி ஆசிரியர், ‘கஃப்சா’ எனப்படும் அரேபிய அசைவ உணவுவகைகளை தனது பள்ளி மாணவர்களுக்கு அளித்து வெற்றியைக் கொண்டாடினார். மேலும் பாலக்காடைச் சேர்ந்த மீன் விற்பனையாளரான சாய்தாலவி 200 கிலோ மீன்களை இலவசமாக பொதுமக்களுக்கு அளித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.
இதையும் படிங்க: 'வாரிசு' படம்: சபரிமலையில் பேனர் வைத்து வழிபட்ட ரசிகர்கள்!