பருக்காபாத்: உத்தரப் பிரதேச மாநிலம் பருகாபாத் மாவட்டத்தை சேர்ந்த இளம் பெண்ணுக்கு 3 மாதங்களுக்கு முன் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. மணப்பெண் உயர்நிலை பள்ளி வரை படித்துள்ளார். இதனால் மணமகன் வீட்டார் மாப்பிள்ளை அதற்கும் மேல் படித்துள்ளதாக பொய் கூறியுள்ளனர்.
திருமணத்திற்கு முதல் நாள் சடங்குகள் நேற்று (ஜனவரி 20) நடைபெற்ற நிலையில், மணப்பெண்ணின் சகோதரர் மணமகனிடம் வரதட்ணையாக பணக் கட்டுகளை வழங்கி உள்ளார். இந்த பணத்தை வாங்கி மணமகன் எண்ணிப்பார்க்காமல் வைத்துக் கொண்டுள்ளார். அப்போது பணத்தை எண்ணிப் பார்க்குமாறு மணமகள் வீட்டார் தெரிவித்த போது மாப்பிள்ளை சட்டை செய்யாமல் அமைதியாக இருந்துள்ளார்.
இதனால் சந்தேகித்த மணமகள் வீட்டார் புதுமாப்பிள்ளையின் படிப்பு குறித்து விசாரித்துள்ளனர். அப்போது மாப்பிள்ளை எழுத்தறிவு துளியும் இல்லாவதர் என்பது தெரியவந்துள்ளது. அடுத்த ஒருநொடியே திருமண வீடு பட்டிமன்றம் போல மாறியது. படிப்பறிவு இல்லாத மணமகனை மணக்க மாட்டேன் என்று புதுப் பெண் திருமணத்தை புறக்கணித்தார்.
இரு வீட்டாரிடையே குழப்பமும் சலசலப்பும் ஏற்பட்டது. இதுகுறித்து தகவலறிந்த வந்த போலீசார் இரு வீட்டாரை சமாதானப்படுத்தினர். தொடர் பேச்சுவார்த்தையை அடுத்து இரு தரப்பினரும் திருமணத்திற்காக செய்து கொண்ட செலவை தங்களுக்குள் கணக்கு பார்த்து முடித்துக் கொள்வதாக முடிவு செய்யப்பட்ட நிலையில், மணமகன் வீட்டார் சொந்த ஊருக்கு திரும்பினர்.
இதையும் படிங்க: IND VS NZ 2nd ODI: தொடரை கைப்பற்றியது இந்தியா..!